Monday, 26 April 2021

சஹீஹான ஹதீஸில் இட்டுக்கட்ட முடியுமா

 சஹீஹான ஹதீஸில் இட்டுக்கட்ட முடியுமா..?


ஒரு ஹதீஸ் சஹீஹ் என்ற தரத்தை அடைய அந்த செய்தி நபி (ஸல்அவர்கள் வரை அறிவிப்பாளர் தொடர் இருக்க  வேண்டும்


உதாரணத்திற்க்கு


🟧நபிகள் நாயகம் (ஸல்


🟧உமர் (ரலிஅன்ஹூ (ஸஹாபாக்கள்)


🟧அல்கமா பின் வக்காஸ் (தாபியீன்கள்)


🟧முஹம்மது இப்னு இப்றாஹீம் (தபா தாபியீன்கள்)


🟧யஹ்யா இப்னு ஸயீத் (ஆசிரியர்)


🟧சுப்யான் (மாணவர்)


🟧அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (கேட்டவர்)


🟧புஹாரி இமாம் (இமாம்)


இப்படியாக அறிவிப்பாளர் தொடர் இருக்கிறது 

இது நேர்மையான நம்பகமான அறிவிப்பாளர் தொடர் 


இவர்களில் யாரும் வேண்டுமென்று இட்டுக்கட்ட கூடிய நபர்களோ அல்லது மாத்தி சொல்ல கூடிய நபர்களோ இல்லை 


அதனால் இவர்கள் ஹதீஸில் இட்டுக்கட்ட வாய்ப்பே இல்லை 


அதே போல மேலே குறிப்பிட்ட அனைவரும் ஒரு ஹதீஸ் தொடரில் வந்தால் எல்லோரும் சஹாபாக்கள் வரை நேரில் சந்தித்து இருக்க வேண்டும் 


அப்படியாக இமாம் புகாரிக்கு அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் அறிவிக்கிறார் 


இருவரும் நேரில் சந்தித்து செய்தியை பெற்றுக்கொள்கிறார்கள் 


அப்போ இதில் இட்டுக்கட்ட வாய்ப்பே இல்லை 

இதில் ஒருவர் இட்டுக்கட்ட வேண்டும் என்றால் அவர் இந்த அறிவிப்பாளர் பட்டியலில் முதலில் இடம்பெற வேண்டும் 


அப்படி அறிவிப்பாளர் பட்டியலில் இடம்பெறாமல் மேலே குறிப்பிட்ட தாபியீன்கள் , தபா தாபியீன்கள் , ஆசிரியர் , மாணவர் , கேட்டவர் , இமாம்கள் இவர்களை மீரி இவர்களுக்கு தெரியாமல் அறிவிப்பாளர் தொடரின் உள்ளே வருவதற்க்கு கடுகளவும் வாய்ப்பு இல்லை


ஒன்று ஆசிரியர் பெயரில் உள்ளே வரலாம் அல்லது மாணவர் பெயரில் உள்ளே வரலாம் அல்லது கேட்டவர் பெயரில் உள்ளே வரலாம் 


இவ்வாறு எப்படி வந்தாலும் அந்த இட்டுக்கட்டிய நபர் எப்படியும் மாட்டிக்கொள்வார் 


அந்த அளவுக்கு அறிவிப்பாளர்களை துல்லியமாக ஆய்வு செய்து நமக்கு கொடுத்து இருக்கிறார்கள் இமாம்கள் 


இந்த அடிப்படையில் நம்பகமான அறிவிப்பில் ஒரு செய்தி வந்தால் அதில் வேண்டுமென்றே ஒருவர் இட்டுக்கட்டவோஅல்லது யாரோ எவரோ எப்படியே இட்டுக்பட்டவோ கடுகளவும் வாய்ப்பு இல்லை என்பதை புரிந்துக்கொள்வோம் 


சஹீஹான ஹதீஸ்களை மறுக்க கூடிய கொள்கையில் இருந்து வெளி வருவோம் 

Monday, 5 April 2021

உசூலுல் ஹதீத்

 

اصول الحديث

உசூலுல் ஹதீத்

ஹதீஸ் கலை சட்டங்களில் ஒரு விதி தான் ஷாத் எனப்படும்

இந்த ஷாத் என்றால் என்ன என்பதை தான் விரிவாக நாம் பார்க்க இருக்கிறோம்

இதை ஏன் நாம் அறிந்துக்கொள்ள வேண்டும் என்றால்

சஹிஹான ஹதீஸ்கள் அதாவது ஐந்து விதிக்கு உட்பட்டு அந்த ஹதீஸ் சஹீஹ் என்ற தரத்தை அடைந்து விட்டால் அது சரியான செய்தி என்பது மட்டும் தான் ஹதீஸ் கலை விதி

ஸஹீஹ் லிதாதிஹி:

1. அறிவிப்பாளர் தொடர்

2. அறிவிப்பாளரின் நேர்மை

3. அறிவிப்பாளரின் நினைவாற்றல்

4. ஷாத் இல்லாமை

5. இல்லத்(மறைமுக குறைபாடு) இல்லாமை

இது தான் ஒரு ஹதீஸ் சஹியான ஹதிஸ் என்ற தகுதியை அடைய ஏற்படுத்தப்பட்ட விதியாகும்

ஆனால் இந்த ஐந்து நிபந்தனைக்கு உட்பட்டு ஒரு ஹதீஸ் இருந்தாலும் அது குர்ஆனுக்கு முறன்பட்டால் அது சஹியான செய்தி கிடையாது அது இட்டுக்கட்டப்பட்டது என்பது புதிதாக உருவாக்கப்பட்ட புதிய கொள்கையாகும்

முஹ்தசீலாக்களும் இந்த கொள்கையில் இருந்தார்கள் என்பதும் உன்மை

முஹ்தசீலாக்கள் போன்ற வழிகெட்ட கொள்கையினரே இந்த அடிப்படையை கையில் எடுத்தார்கள்

ஆறாவதாக உருவாக்கப்பட்ட இந்த விதியை நியாயப்படுத்த இவர்கள் தங்களுக்கு சாதகமாக வலைத்த ஒரு விதி தான் 4 வதாக நாம் மேலே குறிப்பிட்ட ஒரு விதியாகும்

அதாவது ஒரு அறிவிப்பாளருக்கு முறனாக அவரை விட தரம் குறைந்த ஒரு அறிவிப்பாளர் முறனாக அறிவிக்க கூடாது அப்படி ஒரு அறிவிப்பாளர் அவரை விட தரம் உயர்ந்த அறிவிப்பாளருக்கு மாற்றமாக அறிவித்தால் அந்த செய்தியை நாம் ஏற்றுக்கொள்ள தேவையில்லை என்பது தான் ஷாத் ஆகும்

இந்த விதியை இவர்கள் கையில் எடுத்துக்கொண்டு தான் ஹதீஸோடு ஹதீஸ் முறன்பட்டாலே ஏற்றுக்கொள்ள கூடாது என்றால் குர்ஆனோடு ஹதீஸ் முறன்பட்டால் ஏற்றுக்கொள்ள கூடாது என்கிறோம் என்று சொல்லுகிறார்கள்

பாமர மக்கள் மத்தியில் முறன்பட்டால் மறுக்க வேண்டும் என்கிற இந்த ஷாத் விதியில் இவர்கள் எதை மறைத்து பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்

ஷாத் என்றால் எதற்க்காக இமாம்கள் இந்த சட்டத்தை உருவாக்கினார்கள் என்றால்

ஒரே சம்பவத்தை பல அறிவிப்புகளில் அறிவிக்கும் போது

அந்த அறிவிப்பில் வரும் சம்பவம் ஒரே சம்பவமாக இருக்கும் ஆனால் அந்த அறிவிப்பிகளில் ஒரு அறிவிப்பாளர் மட்டும் சில விடயத்தை மாற்றமாக அதாவது உதாரணத்திற்க்கு 3 அறிவிப்பில் அந்த மூன்று அறிவிப்பாளர்களும் ஒரே விடயத்தை சொல்லி ஒருவர் மட்டும் மாற்றமாக அறிவிக்கும் போது என்ன முடிவு செய்வது என்ற விடயத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட ஒன்று தான் ஷாத் எனப்படும்

எப்படி மாற்றமாக அறிவிக்கப்படும் என்றால்

உதாரணத்திற்க்கு ஒரு ஹதீஸை உங்களுக்கு ஆதாரமாக முன்வைக்கிறேன்


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அபசகுணம் எதிலாவது இருக்குமானால் பெண்ணிலும் குதிரையிலும், வீட்டிலும் தான் இருக்கும்.

[அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ (ரலி), நூல்: ஸஹீஹுல் புகாரி 2859]

ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரழி) வழியாகபுகாரி 2859

ஜாபிர் (ரழி) வழியாகமுஸ்லிம் 4483

ஸஅத் இப்னு மாலிக் (ரழி) வழியாகதிர்மிதி 3420

இந்த ஹதீஸில் அபசகுனம் என்கிற ஒன்று இருந்திருந்தால் இந்த மூன்றில் இருந்திருக்கும் என்று வருகிறது

இதற்க்கு மாற்றமாக இன்னொரு அறிவிப்பை பார்க்கலாம்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்று நோய் கிடையாது; பறவை சகுனமும் கிடையாது. அபசகுனம் (இருக்க வேண்டுமென்றால்) மனைவி, வீடு, வாகனம் ஆகிய மூன்றில்தான் இருக்கும்.

[அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: ஸஹீஹுல் புகாரி 5753]

இந்த இரண்டும் ஒரே கருத்தை சொல்ல கூடிய ஹதீஸ் தான்

வேறு வேறு கருத்தை சொல்லக்கூடிய ஹதீஸ் அல்ல

ஆனால் இதில் சின்ன கோளாரு நடந்து விட்டது

அது என்ன கோளாறு என்றால் புகாரி 5753 ஹதீஸில் இடம்பெரும் ஸுஹ்ரி என்பவர் இந்த ஹதீஸை தவறாக புரிந்து கொண்டு அறிவித்தது தான் இங்கே பிரச்சனை

ஆனால் இரண்டு ஹதீஸும் பேசும் கருத்து ஒரே கருத்து தான் ஒரே சம்பவத்தை தான்

ஸுஹ்ரி என்பவர் மனைவி , வீடு , வாகணம் இதில் தான் அபசகுனம் இருக்கும் என்று புரிந்துக்கொண்டார் ஆனால் அதனுடைய உன்மையான விளக்கம் அப்படி ஒன்று இருந்தால் இதில் தான் இருந்திக்க வேண்டும் என்பதை இதில் தான் இருக்கும் என்று தவறாக புரிந்துக்கொண்டது தான் இங்கே பிரச்சனை

ஒரு சம்பவம் நடந்ததா இல்லையா என்பதை மறுக்கும் சட்டம் இல்லை ஷாத் அந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதில் ஒரு தெளிவான முடிவு எடுப்பது தான் ஷாத் ஆகும்

இந்த சட்டத்தை தான் இவர்கள் எடுத்துக்கொண்டு

குர்ஆனுக்கு முறன் அதனால் மறுக்கிறோம் என்கிறார்கள்

இவர்கள் மறுக்கும் ஒரு ஹதீஸ் கூட இந்த ஷாத் என்கிற விதியின் அடிப்படையில் மறுக்கப்பட்ட ஹதீஸ் அல்ல

1.அறிவுக்கு முறன்

2.நடைமுறைக்கு சாத்தியம் இல்லை

3.அறிவியலுக்கு முறன்

4.வேறு ஒரு சம்பவத்தை குர்ஆனில் எடுத்து அதனோடு ஹதீஸை மோதவிட்டு முறன் கற்பித்து மறுப்பது

இந்த அடிப்படையில் தான் இவர்கள் ஹதீஸ்களை மறுக்கிறார்களே தவிர

ஷாத் என்கிற ஒரு விதியின் அடிப்படையில் இவர்கள் எந்த ஹதீஸையும் மறுக்கவில்லை என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்

ஷாத் என்றால் ஹதீஸோடு ஹதீஸ் முறன்பட்டால் மறுக்கனும் என்கிற பொதுப்படையான பதிலை மட்டும் உங்களுக்கு கொடுத்து ஷாத் என்கிற சட்டத்தை உங்களுக்கு தவறாக போதித்து இருக்கிறார்கள்

ஷாத் என்றால் ஹதீஸோடு ஹதீஸ் மோதுவது அல்ல ஒரு அறிவிப்புக்கு மாற்றமாக மற்றொரு அறிவிப்பாளர் அறிவித்தால் அதில் சரியான செய்தியை எடுப்பது

அறிவிக்ககூடிய சம்பவம் ஒரே சம்பவமக இருக்க வேண்டும்

அப்படி இருந்தால் தான் அது ஷாத் என்கிற விதியில் அடங்கும்

இமாம்கள் குர்ஆனுக்கு முறன் என்றால் மறுத்தார்கள்

சஹாபாக்கள் குர்ஆனுக்கு முறன் என்றால் மறுத்தார்கள்

ஷாத் என்றால் இது தான் என்று பல விடயங்கள் நமக்கு தவறாக போதித்த காரணம் பல ஹதீஸ்கள் தவறாக விளக்கம் கொடுக்கப்பட்டு ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு மறுத்து வருகிறார்கள்

தெளிவை நோக்கிய பயணம்

அடிப்படை அறிந்துக்கொள்வோம்

*******