சூனியம் பகுதி 4
சென்ற பாகங்களுக்கான லிங்க்
நபிமார்களை பார்த்து அந்தந்த சமுதாய மக்கள்
சூனியம் செய்பவர் சூனியத்தால் பாதிக்கப்பட்டவர் அல்லது பைத்தியக்காரர் என்பன போன்ற விமர்சனங்களை வைத்தார்கள்
அதே போல முஹம்மத் நபி ﷺ அவர்களை பார்த்து இறைமறுப்பாளர்கள் ஒரு விமர்சனத்தை வைத்தார்கள்
"சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறினார்கள் (குர்ஆன்)"
நபி ﷺ அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸ்களை மறுக்க இந்த வசனத்தில் இருந்து பீஜேவும்TNTJவினரும் வைக்க கூடிய வாதம்
⭕️நபி ﷺ அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக ஒருவன் சொன்னால் அவன் அநியாயக்காரன்
⭕️லபீத் என்கிற யூதன் நபி ﷺ அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரும் ஹதீஸை இது மறுக்கிறது சூனியம்செய்யப்படவில்லை என்று சொல்கிறது
இந்த வாதங்களுக்கும் நம்முடைய விளக்கத்தை பார்ப்பதற்க்கு முன்னால் ஒரு சம்பவத்தை உங்களுக்கு பதிவு செய்யவிரும்புகிறேன்
கடந்த ஐந்து வருடத்திற்க்கு முன்பு
சவுதி மார்க்க கல்வி யூனிவர்சிட்டியில் Tafseer துரையில் MA படிப்பை முடித்த
கலாநிதி அப்துல்லாஹ் உவைஸ்(ரியாதி) என்கிற மவ்லவி அவர்கள் தன்னுடைய MA படிப்பிற்க்கான ஆய்வு ஒன்றைசமர்ப்பிக்கிறார்கள் இதில் நல்லதையும் ஆய்வு செய்வார்கள் வழிகேட்டையும் அய்வு செய்வார்கள் அந்த அடிப்படையில்வழிகேட்டுக் கொள்கையில் இருக்கும் பீஜேவின் தர்ஜுமாவையும் பீஜேவின் ஆய்வையும் சாமர்ப்பிக்கிறார்கள்
இதனை சரிகண்ட யூனிவர்சிட்டு தஃப்சீர் துரை ஆசிரியர் ஒருவர் சொல்வதாவது பீஜேவை குறித்து
1.பீஜேவுக்கு அரபி தெரியாத காரணத்தால் ஏற்ப்பட்ட விளைவு தான் இது
2.அவருக்கு தப்ஸீரும் தெரியவில்லை குர்ஆன் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லை( உலூம் குர்ஆன்/உஸூல் தப்ஸீர்)
இவ்வாறாக பீஜேவுக்கு அடிப்படை அறிவு இல்லை என்பதாக விமர்சிக்கிறார்கள் உன்மையிலேயே அவருடைய (பீஜேவுடைய) நிலை எவ்வாறாக இருக்கிறது என்பதை பதிவை படித்து புரிந்துக்கொள்வீர்கள்
முஹம்மத் நபி ﷺ அவர்களை மக்கள்(காஃபிர்கள்) சூனியம் செய்யப்பட்ட அதாவது சூனியம் செய்து மக்களை தன்வசம்ஈர்ப்பவர் என்று ரகசியமாக பேசிக்கொண்டார்பள்
அவர்கள் உமக்குச் செவி சாய்க்கின்றபொழுது எதற்கு (என்ன நோக்கத்துடன்) செவி சாய்க்கிறார்கள் என்பதையும், மேலும், அவர்கள் (தங்களுக்குள்) இரகசியமாக ஆலோசனை செய்யும் சமயத்தில், “சூனியம் செய்யப்பட்ட மனிதனையேயன்றி(வேறொருவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை” என்று அநியாயக்காரர்கள் (உம்மைப் பற்றிக்) கூறுகின்றபோதும் நாம் மிக்கஅறிவோம்.
அல்குர்ஆன்: 17:47
இந்த வசனத்தில் சூனியம் செய்யப்பட்ட என்கிற இடத்தில் பயன்படுத்தப்பட்ட அரபு வார்த்தை مَّسْحُوْرًا
மஸ்ஹூரா என்கிற பதம் இங்கே பயன்படுத்துப்பட்டுள்ளது இந்த வார்த்தைக்கு சூனியம் செய்யப்பட்டவர் என்பது தான் நேரடிபொருள் ஆனால் அந்த பொருளில் இங்கே இந்த மஸ்ஹூரா என்கிற பதம் பயன்படுத்தப்படவில்லை
அரபு மொழியை பொருத்தவரை ஒரு வார்த்தை எந்த இடத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்த்து தான் அர்த்தம்கொடுப்பார்கள் நேரடி அர்த்தம் அங்கே பொருந்துமாயின் அதை தான் கொடுக்க வேண்டும் நேரடி பொருள் முறன்பட்டால்அதற்க்கான வேற அர்த்தங்களை அங்கே கொடுப்பார்கள்
மஸ்ஹூர் என்கிற வார்த்தையை புரிந்துக்கொள்ள அதே வார்த்தை வேறு இடத்தில் பயன்படுத்தப்பட்ட சம்பவங்களைபார்க்கலாம்
மூஸா நபி அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று ஒன்பது சான்றுகளோடு ஃபிஅவ்ன் மற்றும் அவனுடைய கூட்டத்தாரிடம்சென்று அந்த ஒன்பது சான்றுகளை செய்து காட்டுகிறார்கள் அவை பின்வருமாறு
மேலும், திட்டமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம், (அதைப் பெற்றுக்கொண்டு) அவர், (தன் சமூகத்தினரான) அவர்களிடம் (அதைக் கொண்டு) வந்தபொழுது (என்ன நடந்ததென) இஸ்ராயீலின்மக்களிடம் (நபியே!) நீர், கேட்பீராக! அப்போது ஃபிர் அவ்ன் அவரிடம், “மூஸாவே! நிச்சயமாக நீர் சூனியம்செய்யப்பட்டவரென நான் உம்மை எண்ணுகிறேன்” என்று கூறினான்.
அல்குர்ஆன்: 17:101
இந்த வசனத்திலும் مَسْحُوْرًا என்கிற வார்த்தை தான் பயன்படுத்தப்படுகிறது இந்த இடத்தில் நாம் சூனியத்தால்பாதிக்கப்பட்டவர் என்கிற பொருளை கொடுக்க முடியாது காரணம் மூஸா நபி அவர்கள் அற்புதங்களை செய்து காட்டிய போதுஃபிர்அவ்ன் செய்த விமர்சனம் இது
சூனியத்தால் பாதிக்பப்பட்டு அந்த பாதிப்பின் ஊடாக இவர் அற்புதங்களை செய்கிறார் என்று சொல்ல மாட்டோம் இவர்சூனியக்காரர் சூனியம் செய்பவர் சூனியத்தின் ஊடாக இவர் இதையெல்லாம் செய்கிறார் கை தடியை போடுகிறார் அதுபாம்பாக மாறுகிறது என்று தான் சொல்லுவோம்
அவ்வாறு தான் பிர்அவ்ன் மூஸா நபி செய்த அல்லாஹ்வின் சான்றுகளை சூனியம் என்றான் மூஸா நபியை சூனியக்காரர்என்றான்
இந்த அடிப்படையில் தான் ஃபிர்அவ்ன் மூஸா நபியை பார்த்து சூனியம் செய்யப்பட்டவர் என்று சொன்னான்
நேரடி பொருளை கொண்டு தர்ஜுமா செய்து இருந்தாலும் அதனுடைய அர்த்தம் அதுவள்ள என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்
இப்போது நாம் முஹம்மத் நபி ﷺ அவர்களை பார்த்து மக்கள் எந்த அடிப்படையில் விமர்சனம் வைத்தார்கள் என்பதைபார்க்கலாம்
குர்ஆனை நபியவர்கள் மக்களுக்கு ஓதி காட்டும் பொழுது
அதில் எந்த வித தவறையும் காஃபிர்களால் கண்டுபுடிக்க முடியிவில்லை குர்ஆனை கேட்க்கும் போது இனிமையாகஇருக்கிறது குர்ஆனுடைய வசனங்களை குறை சொன்னால் ஏற்புடையதாக இருக்காது அதனால் இதற்க்கு ஒரே தீர்வுஅவரை சூனியக்காரர் என்று சொல்வது தான் என்று நபியவர்களை சூனியக்காரர் சூனியத்தின் மூலம் தான் இந்த குர்ஆனைஓதி மக்களை தன்வசம் இழுக்கிறார் என்று சொன்னார்கள் இதை பின்வரும் வரலாற்று செய்தியின் ஊடாக நாம்புரிந்துக்கொள்ள முடிகிறது
குறைஷியர்கள்: அவரை சூனியக்காரர் என்று கூறலாமா?
வலித்: நாம் சூனியக்காரர்களையும் அவர்களது சூனியத்தையும் நன்கறிந்திருக்கிறோம். ஆனால் அவரது பேச்சுசூனியக்காரர்களின் ஊதுதலாகவோ முடிச்சுகளாகவோ நமக்குத் தோன்றவில்லை.
குறைஷியர்கள்: பின்னர் நாம் எதைத்தான் கூறுவது?
வலீத்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரது பேச்சில் ஒரு தனித்துவமான இனிமையும் மிகுந்த கவர்ச்சியும் இருக்கிறது. அதன் தொடக்கம் பழக்குலையாகவும் அதன் இறுதி பறிக்கப்பட்ட கனியாகவும் இருக்கிறது. நீங்கள் முன்பு கூறியதில்எதைக் கூறினாலும் அது பொய்தான் என்று தெரிந்து விடும். உங்களது கூற்றில் மிக ஏற்றது அவரை சூளியக்காரர் என்றுகூறுவதுதான். அவர் ஒரு சூளியத்தைக் கொண்டு வந்து அதன்மூலம் தந்தை-மகன், கணவன்-மனைவி, சகோதரர்கள், குடும்பங்கள் ஆகியோருக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறார் என்றே கூறுங்கள் என்று வலீத் கூறினான், அதைஏற்று மக்கள் திருப்தியுடன் கலைந்தனர். (இப்னு ஹிஷாம்)
முஹம்மத் நபி ﷺ அவர்களை சூனியம் செய்யப்பட்ட என்று மக்கள் விமர்சித்தது சூனியத்தால் பாதிக்கப்பட்டவர் என்கிறஅர்த்தம் கொண்டு அல்ல என்பதை மூஸா நபி சம்பவத்தின் வாயிலாகவும் வரலாற்று செய்தியின் வாயிலாகவும் பார்த்தோம்
பீஜேவுடைய அடுத்த வாதம் என்னவென்றால்
நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக ஒருவன் சொன்னால் அவனை அநியாயக்காரன் என்று அல்லாஹ் சொல்கிறான்அதனால் சூனியம் செய்யப்பட்டதாக சொல்ல கூடாது என்கிறார்
ஒரு வசனத்தை கூட சரியாக புரிந்துக்கொள்ள முடியாதவர் என்பதை விட குர்ஆனில் இட்டுக்கட்டுகிறார் என்பதேபொருத்தமாக இருக்கும்
“சூனியம் செய்யப்பட்ட மனிதனையேயன்றி (வேறொருவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை” என்று அநியாயக்காரர்கள்(உம்மைப் பற்றிக்) கூறுகின்றபோதும் நாம் மிக்க அறிவோம்.
அல்குர்ஆன்: 17:47
வசனத்தை நன்றாக பாருங்க சூனியம் செய்யப்பட்டவர் என்று அநியாயக்காரன் சொல்றான்
சூனியம் செய்யப்பட்டவர் என்று சொன்னதால் அவன் அநியாயக்காரனாக ஆகவில்லை அவன் ஏற்கனகே அநியாயக்காரன்
பீஜே சொல்லுவது போன்று சூனியம் செய்யப்பட்ட என்னு சொன்னால் அவனை அநியாயக்காரன் என்று வசனம் பேசவில்லைஇதிலிருந்து தெளிவாக விளங்க முடிகிறது TNTJவினரும் பீஜேவும் குர்ஆனில் இட்டுக்கட்டி இருக்கிறார்கள் என்று
இறுதியாக
நபிமார்களை பார்த்து மக்கள் பல விமர்சனங்களை வைத்தார்கள் அந்த அடிப்படையில் நம் நபியை பார்த்தும் வைத்தார்கள்சூனியம் செய்யப்பட்டவர் என்று சொன்னார்கள் வஹி செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாமல் வஹி செய்தியை பொய்ப்படுத்தஅது இறைவனின் வார்த்தை அல்ல அதை நீங்கள் சூனியத்தின் ஊடாக செய்கிறீர்கள் வஹியை மறுக்க வஹியை சூனியம்என்று நபியை சூனியம் செய்பவர் என்றும் விர்சித்தார்கள்
குர்ஆனை சூனியம் என்றும் சொன்னால் அந்த வசனம் பின்வருமாறு
அவர்களுடைய உள்ளங்கள் அலட்சியமாக இருக்கின்றன; இன்னும் இத்தகைய அநியாயக்காரர்கள் தம்மிடையேஇரகசியமாக: “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை; நீங்கள் நன்கு பார்த்துக் கொண்டே(அவருடைய) சூனியத்தின்பால் வருகிறீர்களா?” என்று கூறிக்கொள்கின்றனர்.
அல்குர்ஆன்: 21:3
இவர் தூதர் இல்லை சாதரன மனிதர் தான் சாதரன மனிதனாக இருப்பதால் இதையெல்லாம் இவர் சூனியம்தின் ஊடாக தான்செய்கிறார் செய்கிறார் இவர் சூனியம் செய்பவர் இவர் கொண்டு வந்திருக்கும் இந்த குர்ஆன் சூனியம் தான் என்று மக்கள்விமர்சனம் வைத்தார்கள்
அதே போல இந்த சம்பவம் மக்காவில் நடந்த சம்பவம் அதுவும் வஹி இறங்க ஆறம்பித்த காலக்கட்டம் லபீத் என்கிற யூதன்நபிக்கு சூனியம் வைத்தது மதினாவில் இனுதி காலக்கட்டம் ஆயிஷா ரலி அவர்களை திருமணம் செய்த பிறகு நடந்தவை
மக்காவில் நடந்த சம்பவத்தை கொண்டு வந்து மதினாவில் நடந்த அதுவும் பிற்காலத்தில் நடந்த சம்பவத்தோடு இனைத்துஅறிவற்ற வாதங்களை முன்வைத்து இருக்கிறார் பீஜே
நான் மேலே சவுதியில் நடந்த சம்பவத்தை குறிப்பட்ட காரணத்தை நீங்கள் அடைந்து இருப்பீர்கள்
பீஜேவுக்கு அரபும் தெரியாது குர்ஆன் தப்ஸீரும் தெரியாது ஒன்றும் தெரியாமல் நுனிப்புல் மேய்பவர் என்தை புரிந்துஇருப்பீர்கள்
சூனியம் செய்யப்பட்டவர் என்றால் சூனியம் செய்பவர் என்ற அர்த்தங்களை கொண்டே மக்கத்து காஃபிர்கள் சொன்னார்கள்என்பதை போதுமான ஆதாரங்களோடு பார்த்தோம்
அல்லாஹு அஹ்லம்
அல்லாஹ் நம் அனைவரும் தெளிவை கொடுக்க
வழிகேட்டில் இருந்து பாதுகாக்க போதுமானவன்
அடுத்தடுத்த பாகங்களில் நாம் பார்க்கவிருப்பை
1.சூனியத்தை உன்மை என்று நம்பியவன் சூவனம் நுழைய மாட்டான் என்கிற ஹதீஸில் நிலை என்ன..?
2.பொய் என்கிற அர்த்தங்களை கொண்டு குர்ஆனில் சூனியம் என்கிற வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளதா..?
3.சூனியக்காரனுக்கு அல்லாஹ்வின் ஆற்றல் இருப்பதாக நாங்கள் சொன்னோமா..?
4.சூனிய ஹதீஸை ஏற்றுக்கொண்டால் நாம் காஃபிரா..?
5.சூனியத்தை எப்படி ஈமான்(நம்பிக்கை) கொள்வது..?
6.சூனியம் குறித்த சஹாபாக்கள் இமாம்கள் எந்த நிலைபாட்டில் இருந்தார்கள்..?
வளரும்
இன் ஷா அல்லாஹ்
-ஆஷிம்(எ) சித்திக் அகமது
No comments:
Post a Comment