Saturday, 31 December 2016

வரம்பு மீறிய மவ்லீத் வரிகள்

 குர் ஆண் வசனத்தோடு மோதும் மவ்லீத் வரிகள் 





மக்களே! நடுநிலையாக இருக்கும் சகோதர சகோதரிகளே!

இன்று மவ்லீத் ஓதுகிறோம் நபியை பின் பற்றுக்கிறோம் எனக்கூறி மக்களை ஏமாற்றி காசு சம்பாதிக்கதான் பார்க்கிறார்கள்

சுப்ஹான மவ்லீதில் வரும் பாடல்

யா நபி ஸலாம் அலைக்கும்,
யா ரசூல் அலைக்கும் என்று தொடங்கும் இந்த பாடலை நான் கீழே அந்த பாடல் முலுவதையும் நான் Scren shart ல் பதிந்து உள்ளேன்

அந்த பாடலில் வரும் வரியில்

عَالِمُ سِرٍّ وَأَخْفى   مُتْسَجِيْبُ الدَّعَوَاتِ
அகமிய ரகசியம் அறிபவரே, ஆழிய மர்மம் அறிபவரே, அகமுணர்ந் திரங்கும் இறைஞ்சல்களை அன்பாய் ஏற்றுக் கொள்பவரே.

மறைவானவற்றை அல்லாஹ் மட்டும்தான் அறிவான் என்று அல்லாஹ் கூறுகிறான்

ஆனால் இவர்கலோ நபி அவர்களுக்கு அறிவும் என்று எழுதிவைத்து பாடுகிறார்கள்

அல்லாஹ் திர்குர்ஆனில் கூறுகிறான்

வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 27:65)

என்கிற இறை வசனத்துடன் நேரடியாக மோதுகிறது!

_________________________________________

இந்த மவ்லீத் முட்டிகளுக்கு இந்த வசனத்தை எடுத்து கான்பித்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

சரி இவர்கள் மத்ஹப் குப்பையில் இருந்து எடுத்துக்காட்டினால் நம்புவார்களா?

இனைவைப்பு என்று

ஹனஃபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் என்ற நூலில்  இருந்து 

நபி (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்று ஒருவன் நம்பினால் அவன் காஃபிராகி விடுவான்
(ஹனஃபி மத்ஹப் நூல் : அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 3 பக்கம் : 94)

இதன் கித்தாப் ஆதாரம் கீழே நான் அந்த பக்கத்தை photo தந்து உள்ளேன் பார்த்துக்கொள்ளலாம்

மக்களே! அறிந்து கொள்ளுங்கள் இவர்கள் குர்ஆனை ஏற்றுக்கொள்ள வில்லை

இவர்கள் குர்ஆனை விட மிகவும் மதிக்க கூடிய மத்ஹப் சாக்கடையும் இவர்கள் பின்பற்றவில்லை

இவர்களிடம் இருந்து மிக மிக கவனமாக இருந்து கொள்ளுங்கள்

ஷிர்க்கை பரப்பும் ஷிர்க் வாதிகள்


Wednesday, 28 December 2016

பலவீனமான_ஹதீஸ்

பலவீனமான_ஹதீஸ்




உம்மு ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய நாள் (ஹஜ்ஜுப் பெருநாள்) அன்று பத்னுல் வாதியிலிருந்து ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்தை நான் பார்த்தேன். பிறகு திரும்பிச் சென்றார்கள். ஹஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் நபியவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். அவருடன்  அவருடைய குழந்தையும் இருந்தது. அந்தக் குழந்தைக்கு யாருடனும் பேசமுடியாத
நோய் இருந்தது. அந்தப் பெண் “அல்லாஹ்வின் தூதரே இவன் என்னுடைய மகன். என்னுடைய குடும்பத்தில் எஞ்சியிருப்பவன். இவனுக்கு (யாருடனும்) பேசமுடியாத நோய் உள்ளது“ என்று கூறினார். நபியவர்கள் “என்னிடத்தில் கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தன்னுடைய இரண்டு கைகளையும் கழுவி வாய் கொப்பளித்து பிறகு (அதனை) அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்கள். “இதிலிருந்து அவனுக்கு நீ புகட்டு. இதிலிருந்து அவன் மீது ஊற்று, அவனுக்காக அல்லாஹ்விடம் நிவாரணம் தேடு” என்று கூறினார்கள்.
உம்மு ஜூன்துப் (ரலி) கூறுகிறார் : அந்தப் பெண்ணை (பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில்) நான் சந்தித்தேன். அந்தத் தண்ணீரில் இருந்து எனக்குக் கொஞ்சம் தந்தால் என்ன? என்று கேட்டேன். அதற்கவர் “அது இந்த நோயாளிக்கு மட்டும்தான்“ என்று கூறினார். மேலும் (உம்மு ஜூன்துப்) கூறுகிறார் : நான் அந்த வருடத்திற்குள் அப்பெண்ணைச் சந்தித்தேன் அவரிடம் அந்தச் சிறுவனைப் பற்றிக் கேட்டேன். அதற்கவர் “அவனது நோய் நீங்கி விட்டது. சாதரண மனிதர்களின் சிந்தனைத் திறன் போல் இல்லாமல் மிகச் சிறந்த அறிவினைப் பெற்றிருக்கிறான்“ என்று கூறினாள்.
நூல் : இப்னு மாஜா (3523)

இதே ஹதீஸ் முஸ்னத் ஹுமைதி என்ற நூலில் 1565 ஹதீஸில் இந்த ஹதீஸ் லஃயீப் என்று உள்ளது

காரனம் இந்த ஹதீஸில்

யஸீத் பின் அபீ ஸியாத் என்ற அறிவிப்பாளர் பலவீனமான வர்

இமாம் நஸயீ அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்றும், இமாம் தாரகுத்னி அவர்கள், "ஆதாரப்பூர்வமான கிதாபுகளில் இவருடைய பலவீனமான செய்திகளைப் பதிவு செய்யக்கூடாது; இவர் அதிகமாகத் தவறிழைப்பவர்; இவர் தனக்குச் சொல்லப்பட்டதை அப்படியே கூறுவார்' என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.
நூல்: தஹ்தீப் தஹ்தீப்
(பாகம்: 11, பக்கம்: 288) 

அதே போன்று இந்த ஹதீஸில் இடம் பெரும்

சுலைமான் பின் அம்ர் அல்அஹ்வஸ்  அறிவிப்பாளர்

(மஜ்ஹுல்)

யாரென்றே அறியப்படாதவர் ஆவார்.
இந்தச் செய்தி மிகவும் பலவீனமானது என்பதை மேற்கண்ட காரணங்களிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

Monday, 5 December 2016

குரான் படி வானம் என்றால் என்ன? அதன் எல்லை எது?




குரான் படி வானம் என்றால் என்ன? அதன் எல்லை எது?


இந்த முழு பிரபஞ்சமும் ஒரே ஒரு ஆரம்ப புள்ளியில் இருந்து உருவானது என்பது  பெரு வெடிப்பு கொள்கை. குரான் பெருவெடிப்பு கோட்பாடுக்கு ஒத்துவருகிறதா? இல்லையா? குரானின் 21:30 பின்வருமாறு கூறுகிறது.

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (21:30 )


அது சரி குரான் படி வானம் என்றால் என்ன? அதன் எல்லை எது? என்ன வரையறை? எனவே முதலில் வானத்தை பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்வோம். பிறகு 21:30 வசனத்திற்கு வருவோம். குரான் வானம் என்கிற வார்த்தையை பொதுப்படையான முறையிலும், சில சமயம் "specific " ஆன முறையிலும் பயன்படுத்துகிறது.  இங்கே இந்த பதிவில் கொஞ்சம்  பார்ப்போம்.





வானம் என்றால் என்ன? வரையறை என்னஎல்லை எது? என்பதை கொஞ்சம் விரிவாக பாப்போம்.



பொதுவான பயன்பாடு:
======================
தற்கால அறிவியல் அறிவை மனித குலம் பெறுவதற்கு முன் தலைக்கு மேலே இருப்பது எல்லாமே வானம்தான், அண்ணார்ந்து பார்த்தல் தெரிவது எல்லாம் "வானம்". உதாரணத்திற்கு இந்த இரண்டு வசனங்களை பார்க்கவும்.

வசனம் 1:
--------------
அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்;... (2:22)


=> எங்கே இருந்து மழை பொழிகிறதோ, எங்கே பறவைகள் பறந்து செல்கிறதோ அவை எல்லாம் உள்ளடக்கிய பொதுவான வானம். இதை சாமானியன் புரிந்துகொள்ள கூடியது. ஆழ்ந்து கவனித்தால் (2:22) இல் வானத்தை "விதானமாக" அமைத்து உள்ளோம் என்றும் சேர்த்தும் கூறுகிறான். அதாவது வானத்தை கூரை போன்று, (Top /ceiling) ஆக்கி இருக்கிறோம் என்று அதன் அர்த்தம். அப்படி என்றால் வானம் முடிந்துவிட்டதா? இந்த கீழே உள்ள வசனத்தை பார்க்கவும்

வசனம் 2:
--------------
இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை. (15:22)

ஆகவே முதல் இரண்டு வசனங்களை ஒன்று சேர்த்து பார்த்தால் காற்றுவெளி அடங்கிய, பறைவகள் பறக்க ஏதுவான, மழை மேகங்களை தாங்கி செல்லும் வானத்தை பற்றி குரான் குறிப்பிடுவதை அறியலாம். இந்த வானத்திற்கு முடிவு உண்டு என்பதையும் இதிலிருந்து பெறுகிறோம்.  


Specific ஆன பயன்பாடு:
=====================
எங்கே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இருக்கிறதோ அவற்றையும் வானம்   என்றே குறிக்கிறது. நம்முடைய தற்கால அறிவியல் படி இதை space  என்று கூறுகிறோம். 

வசனம் 3:
--------------
வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம். (15:16. )

வசனம் 4:
--------------
 வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன். (25:61.)

மழை மேகம் போன்றவற்றை கூறும் போது அந்த வானத்திற்கு முடிவு/எல்லை/விதானம் இருக்கிறது என்று கூறுவதில் இருந்து பொதுவாக சொல்லப்படும் வானத்தில் காற்று உண்டு - அதாவது வளிமண்டலம் (atmosphere) இருக்கிறது, பிந்தயதுக்கு (அண்டவெளி - space) வளிமண்டலம் இல்லை என்ற விளக்கம் கிடைகிறது. இதற்கு வலு சேர்க்கும் விதத்தில் பின்வரும் வசனங்கள் அமைகின்றன.

வசனம் 5:
--------------
மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்கவில்லை. (21:16. )

வசனம் 6:
--------------
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. (20:6. )


இந்த 5,6 இரு வசனங்களும் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ளதை பற்றி பேசுகிறது. அது என்ன? வளிமண்டலத்தை தவிர வேறு என்னஇந்த குரான் வசனங்கள்  மூன்று physical matters பற்றி பேசுகிறது. (1) பூமி (2) வானம் (3) வானம் மற்றும் பூமிக்கு இடைப்பட்டவை.  எனவே வானம் மற்றும் பூமிக்கு இடைப்பட்டவை என்பது  வளிமண்டலம்  ஆகும். குரான் space மற்றும் atmosphere இரண்டையும் பிரித்துதான் பேசுகிறது என்பதை பின்வரும் உதாரணங்களுடன் நிருபிக்க முடியும். குரான் அழகாக பூமியில் இருந்து SPACE எனப்படும்  வானத்தை பிரித்தோம்  என்று கூறுகிறது.


பூமியில் இருந்து வானம் பிரிக்க்கப்பட்டது

ஆதாரம் 1:
=========
உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான். அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான். (79:27-28)

வளிமண்டலத்திற்கு (atmosphere) பிறகு உள்ளது வெறும் space. அதில் யாரும் வசிக்கமுடியாது. எனவே அதை வசனம் 1 வானத்தை (வளிமண்டலம் என்று சொல்லப்படும் வானத்தைத் பாதுகாப்பானதாக ஆக்கி உள்ளோம் என்று கூறுகிறது. (50:38) இல்  நட்சத்திரங்கள் நிரம்பியதுதான் வானம். (79:27)  இல்  வானத்தின் முகட்டை பூமியின் மேல் இருந்து உயர்த்தி நிறுத்தினேன் என்கிறான். அப்படி என்றால் நட்சத்திரங்கள் அடங்கிய வானத்திற்கும் பூமி பந்துக்கும் இடையில் என்ன உள்ளது atmosphere ஐ குறிக்கிறது.


ஆதாரம் 2:
=========
ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும். (41:12)


தற்கால அறிவியல் வளிமண்டலத்திற்கு எல்லை உண்டு என்கிறது. அதை பல அடுக்குகளாக பிரித்து ஒவ்வொரு அடுக்குக்கும் ஒவ்வொரு இயல்புகளை கூறுகிறது.




குர்ஆனில் space vs atmosphere:

அல்லாஹ் குர்ஆனில் space க்கும் atmosphere க்கும் இடையே வேறுபாடு உண்டு என்பதை தெளிவாக கூறுகிறான்.

உதாரணம் 1:

மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.
நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள். (55:7-9)

வானத்திற்கும் தராசுக்கும் என்ன சம்பந்தம்? பூமியில் இருந்து மேலே செல்ல செல்ல ஈர்ப்பு விசை குறையும். எனவே மேலே space -இல் Gravitational Pull மிக மிக குறைவு என்பது நமக்கு இந்த காலத்தில் தெரியும். ஆனால் குரான் இதை முன்பே கூறிவிட்டது. ஆம் நீங்கள் தராசை எடுத்துக் கொண்டு 10 KM  உயரத்தில் நின்று அளவிடுங்கள், பிறகு  மேலும் மேலே space  சென்று எடை போடுங்கள், அது வேறு ஒரு நிறையைதான் காட்டும். ஆகவே இவ்வாறு  இந்த குரான் வசனம் மூலம் இரண்டு வானங்களுக்கு இடையே உள்ள வேற்றுமையை தராசின் உத்தரத்தின் மூலம் அழகாக படம் பிடிக்கிறது.

(இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அல்லாஹ் வானத்தை உயர்த்தியதால்தான் தராசு வேலை செய்கிறது என்று கூறி உள்ளான், புவி ஈர்ப்பு என்று நேரடியாக சொல்லவில்லை, அதனால் நாம் புவி ஈர்ப்புவிசையை மறுக்கிறோம் என்று எடுத்துக் கொள்ள கூடாது.

தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன். 22:65

வானங்களும் பூமியும் (தத்தம் எல்லையிலிருந்து) விலகிவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பவன் நிச்சயமாக அல்லாஹ்தான். (தம் எல்லையில் இருந்து) அவ்விரண்டும் சாய முற்பட்டபோதிலும் அவை சாயாதபடி தடுக்கக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறொருவனுமில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனும் மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான். 35:41.

மேலே இந்த வசனத்தில் space பூமியின் atmosphere ஐ காலி செய்துவிடாமல் இருக்க அதை தடுத்துக் கொண்டு இருக்கிறான் என்று கூறுவதை கவனியுங்கள், இந்த தடுப்பு செயல் -   space க்கும் பூமிக்கும் இடையே வளிமண்டலத்தை இழுத்து வைத்துக் கொள்ளும் ஒரு விசை - செயல் -ஆற்றல் என எடுத்துக் கொள்ளலாம்.  உடனடியாக எந்த ஒரு தீர்மானத்தையும் சொல்லாமல் இப்போது விட்டுவிடுகிறேன்.. இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இந்த குரான் வசனத்தில் உள்ள அறிவியல் அற்புதங்களை தனி பதிவாக இடுவோம்.)

உதாரணம் 2:
உதாரனத்திற்க்கு பூமியில் வளிமண்டலம் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் மூச்சுவிட காற்று இருக்காது, பூமியில் மழை, மரம், உயிரினங்கள் போன்ற எந்த ஒரு  விஷயங்கள்  எதுவுமே  நடந்திருக்காது  என்பது ஒரு புறம் என்றாலும் பகல் இரவாவது  இருக்குமா?
என்றால் அது கூட இருக்காது. ஆகவே பூமியை படைத்த அல்லாஹ் அதில் வாழ்வாதரங்களை ஏற்படுத்த செய்த வேண்டிய முக்கியமான நிகழ்வு, அதாவது பூமியில் இருந்து வானத்தை (space) பிரிக்க வேண்டும் - இரண்டிற்கும் நடுவே வளிமண்டல வானத்தை ஏற்படுத்துவதே ஆகும்.


உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான். அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான். (79:27-28)

 நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்;... ( 50:38.)


பகலை படைக்க முடியுமா? இரவை படைக்க முடியுமா?

பூமியில் இருந்து space - ஐ பிரிக்காவிடால் பகல் இரவு எப்படி இல்லாமல் போகும் என்கிற கேள்வியும் நியாயமாகத்தான் படுகிறது. நிலாவை பாருங்கள் அதனுள் வளிமண்டலம் மிக மிக பலவீனமானது. எப்போதுமே இருள்தான். பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே உள்ள space (அதாவது above harizon ) கூட இருள்தான். பூமிக்குள் கற்று இருப்பதால்தான் below Harizon இல் வெளிச்சம் இருக்கிறது. இரவு பகலை உண்டாக்க, பூமியில் உயிரினங்களை, மழையை உண்டாக்க வானத்தை (space ) பூமியில் இருந்து பிரித்தேன் என்கிறான்.

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (21:30)

உங்களைப் படைப்பது அதிகச் சிரமமான வேலையா? அல்லது வானத்தைப் படைப்பதாஅல்லாஹ் அதனை நிர்மாணித்தான். அதன் முகட்டை நன்கு உயர்த்தினான். பிறகு அதைச் சமப்படுத்தினான். மேலும், அதன் இரவை மூடி, அதன் பகலை வெளிப்படுத்தினான். (79:27-29)
 இருள் என்பது ஒளி இல்லாமை, இரவு என்பது பகலுக்கு பிந்தைய நிலை. என்பதை மனதில் வைத்துக் கொண்டு கட்டுரையை தொடரவும். முதலில் வெளிச்சம் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.

வெளிச்சம் என்றால் என்ன?
------------------------------------------------
வளிமண்டலத்தில் உள்ள வாயு மூலக்கூறுகள், நீர் துகள்கள் மற்றும் மாசு துகள்கள் ஒளியை சிதறடித்து விடுகிறது. சூரியனின் மின்காந்த அலைகள் அணுக்களில் படும் போது அவற்றின் எலக்ட்ரான்கள் அதை உள்வாங்கி higher energy level க்கு செல்கிறது, பிறகு தன்னுடைய பழைய நிலையான ground state -க்கு வரும் போது பெற்ற ஆற்றலை ஒளியாக வெளியிடுகிறது.

ஆகாயம்  நீல நிறம் ஏன் ?
----------------------------------------
ஒளி நமது வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படும் பொது எல்லா அலைநீளங்களும் அதனுடைய நிறங்களும் வெளிபடுகிறது. ஒளிகற்றை நேரடியாக வளிமண்டலத்தில் படும் போது குறைந்த அலை நீலம் உள்ள நீலம் மற்றவைகளை விட அதிகமாக சிதறடிக்கவும் படுகிறது. நமது கண்கள் மற்ற நிறங்களை விட நீல நிறத்தை எளிதாக உணர்வதால் நமக்கு வானம் நீல நிறமாக தெரிகிறது. எப்போது ஒளி  அதிக தூரம்  பயனிகிறதோ அப்போது அதிக அலை நீளம் உடைய சிவப்பு நிறம் நமக்கு தெரிகிறது. அதனால் சூரியன் மறையும் போதும், உதிக்கும் போதும் வானம் செவ்வானமாக காட்சி தருகிறது 

வெளிச்சம் எப்படி உருவாகிறதுவளிமண்டலத்தில் உள்ள துகள்கள்  சூரிய ரேடியேஷனால் பெற்ற எனெர்ஜியை வெளியிடுபோது அது வெளிச்சம் கிடைக்கிறது. அதாவது சூரியனின் மின்காந்த அலைகள் அணுக்களில் படும் போது அவற்றின் எலக்ட்ரான்கள் அதை உள்வாங்கி higher energy level க்கு செல்கிறது, பிறகு தன்னுடைய பழைய நிலையான ground state -க்கு வரும் போது பெற்ற ஆற்றலை ஒளியாக வெளியிடுகிறது.


=> எனவே  பகல், வெளிச்சம் எல்லாம் பூமிக்கு மட்டுமே சாத்தியமே தவிர பூமிக்கும்  சூரியனுக்கும் நடுவே அமைக்கப்பட்ட ஸ்பேஸ் ஸ்டேஷக்கு அல்ல. அதே போலதான் வானம்(ஈதர், பிளாக் மேட்டர் அடங்கிய வானம் பூமியோடு சேர்ந்து இருக்கும் வரை அங்கே வளிமண்டலம் இல்லை,


=> எனவே பகல் அங்கே இல்லை, எப்போதுமே  இருட்டுதான். ஆகவே தான் அல்லாஹ் தெளிவாக கூறுகிறான் வானம் எப்போது உயர்தப்பட்டதோ (மேலும் வானத்திற்கும், பூமிக்கும் இடைப்பட்ட ஒன்று எப்போது படைக்கப்பட்டதோ) அப்போதுதான் இரவை மூடி பகலை வெளிக் கொண்டு வந்தோம். எனவே பகல் படைக்கப் பட்டதே...
இருள் என்றால் என்ன?
-------------------------------------------
எங்கே ஒளி  இல்லையோ அங்கே இருள் என்று பொதுவாக சொல்லலாம். பூமிக்கு மேல அண்ட வெளி முழுவதும் காற்றோ, நீரோ, மாசு துகள்களோ இல்லை.  சூரியன் மற்றும் நட்சத்திரங்களால் அண்டவெளி முழுவதும் மின்காந்த radiation பரவி இருக்கிறது. அண்ட வெளி முழுவதும் உள்ள ஈதரோ பிளக் மேட்டரோ அதை உள்வாங்கி higher energy level க்கு  செல்வது இல்லை. எனவே ஒளி அங்கே உருவாவது இல்ல.  இருள்  மட்டுமே எங்கும் வியாபித்து இருப் பது போல நாம் உணருகிறோம். இது பற்றிய பல ஆய்வுகள் இன்றும் தொடர்கின்றன..

அண்டவெளியில் இருள்:
---------------------------------------
சந்திரனுக்கும்  பூமிக்கு அப்பால் சென்று பார்க்கும் போது நமக்கு எப்போதுமே ஒளிரும் தன்மை உள்ள சூரியன், நட்சத்திரங்கள் போன்றவற்றை பார்க்கலாம். அதே போல ஒளியை பிரதிபலிக்கும் எந்த ஒன்றையும் அதாவது நிலா, விண்கற்கள், ஏனைய கிரகங்கள், பூமி, ஸ்பேஸ் ஸ்டேஷன் ஆகியவற்றை பார்க்கலாம். ஆனாலும் நாம் இருளுக்குள் தான் இருக்கும். நிலவின் பிரதிபலிக்கும் தன்மை < 20%, அதனால் அது பிரகாசிப்பது போல மட்டும் நமக்கு தெரிகிறது.  நிலவில் விண்வெளி வீரர்கள் இருக்கும் பகல் நேரத்திலும் கூட வெளிச்சம் அற்ற நிலையையே உணருவார்கள்.   எனவே வளி மண்டலம்  இருந்தால் மட்டுமே (1) பகல் என்பதெல்லாம் சத்தியம். (2) நீல நிற வானம் சத்தியம். வெளிச்சம் என்பதே அண்டத்தில் உள்ள radiation  ஆனது அணுக்களால்  உள்வாங்கப்பட்டு ஒளியாக வெளியிடப்பட்டால் வெளிச்சம், ஆனால் அதை வெறுமனே உருஞ்சி கொண்டால் இருள். எனவே ஒளியையும்விளக்க அணுக்கள் வேண்டும். வெளிச்சம் இல்லாவிட்டால் இருள் என்று அனைவருக்கும்  தெரியும்.


இருளை படைக்க  முடியுமா?
----------------------------------------------
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்; (6:1. )
வானங்களையும், பூமியையும் படைத்ததாக கூறுகிறான். வானம் மற்றும் பூமி என்று எதுவுமே படைக்கப்பட்டாத போது அங்கே என்ன இருந்தது என்று சொல்ல முடியுமா? படைத்தேன் என்று கூறுவதால் படிபதற்கு முன்பு எதுவுமே(space, time) இல்லை.   physics ஐ பொருத்த வரை எப்பொழுது ஒரு பொருளோ, இடமோ கருமை என்று சொல்லப்படும் என்றால் when it absorbs photons, causing it to appear dim compared to other objects. இங்கே எதுவும் படைக்கப்படும் முன்பு இருளும் இல்லை, இருள் இருக்க இடமும்(space) இல்லை.  எனவே இருளை படைத்தான் என்று சொல்வது மிகப் பொருத்தமானது.


முடிவுரை:
=========
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (21:30 )

வானம் பூமி  இணைந்து இருந்தன. பிறகு பிரித்தோம் என்று கூறுவதை கொண்டு, ஆம் என்றே படுகிறது. வெடிப்பிற்கு முன் வானம் பூமி ஆகியவற்றின் சேர்ந்த "entity"   (ஒரே புள்ளியில் இருந்து) இவை உருவாகி  இருக்க வேண்டும் என்பது அதன் கோட்பாடு. அப்படி என்றால் குரான் பெரு வெடிப்பு படியான முழுவதும் ஏற்கிறதா? என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். இன்னும் அந்த கோட்பாடானது பல விடயங்களுக்கு பதில் தரவில்லை. எனவே அதை ஒரு தியரி அளவியே வைத்து கொள்ள வேண்டும். அதை வைத்து குரானை எடைபோட முடியாது. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

நபிகள் நாயகம் கூறுகிறார்கள்:(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. பிறகு அவன் நீரை படைத்தது அதில் தனது அர்ஷ்(சிம்மாசனத்தை) அமைத்தான்" (பாகம் 3, அத்தியாயம் 59, எண் 319).

11:7. மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது.

 குரான் (11:7) கூறுகிறது: "அல்லாஹ்  அர்ஷ் என்னும் சிம்மாசனத்தில் இருக்கிறான். அந்த சிம்மாசனம் எங்கே உள்ளது என்றால் மற்றொரு நபி மொழி அர்ஷ் எனும் சிம்மாசனம் ஏழு வானங்களுக்கும் அப்பால் உள்ளது என்று கூறுகிறது. அங்கே யாரும் செல்ல முடியாது என்று இஸ்லாம் கூறுகிறது

எனவே அல்லாஹ்வின் இருப்பிடமோ, அவனின் படைப்பு தன்மை போன்றவற்றை அறிவியல் விதிகளுக்கு உட்படுத்த முடியாது. ஏனெனில் பெருவெடிப்பிற்க்கு முன் எதுவுமே இல்லை. ஆனால்  பிறப்பே இல்லாத அல்லாஹ் காலம் காலமாக இருந்துவருகிறான், அவன் முதலில் நீரை படைத்து அதில் அர்ஷையும் அமைத்தான் என்பது நபி மொழி.