Thursday 16 March 2023

சூனியம் பகுதி 8

 சூனியம் பகுதி 8


بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمٰنِ ٱلرَّحِيمِ


சூனியம் குறித்து TNTJ மற்றும் PJ தரப்பினர் குர்ஆன் சுன்னாவில் இருந்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் தெளிவானமுறையில் சென்ற பாகங்களில் பதில் எழுதி இருக்கிறேன் 


அதனை தொடர்ந்து இதில் இமாம்கள் குறித்து இவர்கள் செய்யும் பித்தலாட்டங்களை இதில் பார்க்கவிருக்கிறோம் 


நபி  அவர்களுக்கு லபீத் என்கிற யூதன் சூனியம் வைத்தான் அந்த சூனியத்தின் ஊடாக அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்குதாக்கம் ஏற்ப்பட்டது என்று வரக்கூடிய ஹதீஸை பீஜேவும் TNTJவும் தான் மறுக்கிறீர்கள் இதுவரை யாரும் அந்த ஹதீஸைமறுத்தது இல்லை என்று நாம் வாதம் வைக்கும் பொழுது 


இமாம்களும் சூனியத்தை மறுத்து இருக்கிறார்கள் 

நாங்கள் சொல்ல கூடிய அதே விளக்கத்தை சூனியத்திற்க்கு இமாம்கள் கொடுத்திருக்கிறார்கள் என்று சில ஆதாரங்களைமுன் வைப்பார்கள் 


🔸இமாம் இப்னு ஹஸ்ம்(ரஹ்)

🔸இமாம் அபூ பக்கர் ராஸீ(ரஹ்)

🔸இமாம் பைலவி(ரஹ்)


இப்படி சில இமாம்களை குறிப்பிட்டு இவர்கள் எல்லாம் சூனியத்தை மறுத்து இருக்கிறார்கள் என்று வாதம் வைப்பார்கள்


உன்மையில் இமாம்கள் சூனியத்தை மறுத்தார்களா..? என்பதை பார்க்கலாம் 


இதில் நான் பயன்படுத்தும் கிதாப் ஆதாரங்கள் அனைத்தும் மவ்லவி அப்பாஸ் அலி அவர்கள் எழுதிய சூனியம் என்கிற கிதாபில்இருந்து எடுத்தவை தான் என்பதை பதிவு செய்துக்கொள்கிறேன் 


இமாம் இப்னு ஹஸ்ம் ரஹ் அவர்கள் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா வரும் ஹதீஸை குறிப்பிட்டு அதற்க்கு இவ்வாறுவிளக்கம் கொடுத்துள்ளார்கள் 


 فهذا خبر صحيحوقد عرف الله تعالى رسوله صلى الله عليه وسلم من سحرهفلم يقتله

இறைத்தூதர்(ஸல்அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக ஸஹீஹ் அல் புகாரீயில் வரும் இச்செய்தி ஆதாரப்பூர்வமானசெய்தியாகும்இறைத்தூதர்(ஸல்அவர்களுக்கு சூனியம் வைத்தது யார்என்பதை அல்லாஹ் தன் தூதருக்குதெரியப்படுத்தினான்

அல்முஹல்லா (பாகம்: 11 பக்கம்: 400)


அடுத்ததாக இமாம் அபூ பக்கர் ராஸீ ரஸ் அவர்கள் சூனியத்திற்க்கு அல்லாஹ் நாடினால் தாக்கம் ஏற்படும் என்று பின்வருமாறுகுறிப்பிட்டுள்ளார்கள்


تفسير الرازي : مفاتيح الغيب ـ موافق للمطبوع (201/3) 


قال الحسن المراد منه التخلية يعني السحر إذا سحر 

إنساناً فإن شاء الله منعه منه 


وإن شــــاء خلی بينه وبين ضرر السحروثالثها أن الضرر الحاصل عند فعل السحر إنما يحصل بخلق الله وإيجاده وإبداعه


ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சூனியம் செய்தால் அல்லாஹ் நாடினால் அந்த பாதிப்பை தடுத்துவிடுவான்அவன்நாடினால் அந்த பாதிப்பு அவனுக்கு ஏற்படும்படி விட்டுவிடுவான்சூனியத்தை செய்யும்போது ஏற்படும் பாதிப்பை அல்லாஹ்வேபடைக்கிறான்அவனே அதை உருவாக்குகிறான்அவனே அதை ஏற்படுத்துகிறான்


தஃப்சீருர் ராஸீ (பாகம் 3 பக்கம் 201)


تفسير الرازي : مفاتيح الغيب ـ موافق للمطبوع (201/3) 


واعلم أن المعتزلة أنكروا ذلك بأسرهم


முஃதஸிலாக்களே சூனியத்தை ஒட்டுமொத்தமாக மறுக் கின்றனர் என்பதை நீ அறிந்துகொள்


தஃப்சீருர் ராஸீ (பாகம் 3 பக்கம் 201)


அடுத்ததாக இமாம் பைளாவி ரஹ் அவர்களுடைய நிலைபாட்டை பார்க்கலாம் 


சூனியத்தின் மூலம் கணவன் மனைவிக்கிடையே பிரிக்க முடியும்அதன் மூலம் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் யாருக்கும்எந்த தீங்கையும் செய்ய முடியாதுஏனென்றால்சூனியமும் வேறு காரணங்களும் இயல்பாக பாதிப்புகளை ஏற்படுத்தாதுமாறாக உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் ஆணைப்படியே அவை பாதிப்பை ஏற்படுத்தும்


நூல்தஃப்சீருல் பைளாவீ (பாகம்: 1 பக்கம்: 98)



فَيَتَعَلَّمُونَ مِنْهُما الضمير لما دل عليه من أحدمَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ أي من السحر ما يكون سبب تفريقهماوَما هُمْ بِضارِّينَ بِهِ مِنْأَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ لأنه وغيره من الأسباب غير مؤثرة بالذات، بل بأمره تعالى وجعله.


تفسير البيضاوي = أنوار التنزيل وأسرار التأويل (1/ 98)


இதை விட இன்னும் தெளிவாக பீஜே சூனியன ஹதீஸை வைத்து நபியவர்களுக்கு பைத்தியம் என்று ஹதீஸ் பேசுகிறது என்றுவாதம் வைத்து ஹதீஸை மறுத்தாரோ அந்த வாதத்தை வைத்தே இமாம் பைலாவி ரஹ் அவர்கள் மறுப்பு கொடுத்துள்ளார்கள்அவை பின்வருமாறு


இறைத்தூதர்(ஸல்அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறும் ஹதீஸை நம்புவதால் இறைத்தூதர்(ஸல்அவர்களைசூனியம் செய்யப்பட்டவர் என்று காஃபிர்கள் கூறிய விமர்சனத்தை உண்மைப்படுத்தும் நிலை வராதுஏனென்றால்அவர்கள்சூனியத்தின் மூலம் நபி பைத்தியமாகிவிட்டார் என்பதையே நாடினார்கள்


நூல்தஃப்சீருல் பைளாவீ (பாகம் 5 பக்கம் 551)


رضي الله تعالى عنه فجاء به فقرأهما عليه فكان كلما قرأ آية انحلت عقدة ووجد بعض الخفة ولا يوجب ذلك صدق الكفرة في أنه مسحورلأنهم أرادوا به أنه مجنون بواسطة السحر


تفسير البيضاوي ــ موافق للمطبوع (551/5) 


பீஜே எந்த நிலைபாட்டில் இருக்கிறாரோ அந்த நிலைபாட்டுக்கு நேரடியாகவே மறுப்பு கொடுத்த இமாம் சூனியத்தைமறுத்தார் என்று பச்சையாக இமாம் மீது இவர்கள் இட்டுக்கடி இருக்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்சகோதரர்களே


இன்னும் சில இமாம்கள் சொல்லாத விடயங்களை எல்லாம் அவர்கள் சொன்னதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் 


ஆக்கம் நீண்டு விடும் என்பதால் சில இமாம்கள் கறுத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்


அதிக ஹதீஸ்களை கொண்ட முஸ்னத் அஹ்மத் நூலில் ஒரு ஹதீஸை ஒரு பாமரன் எடுப்பதே கடினமான விடயம் கிட்டதட்ட19  பாகங்களை கொண்ட அஹ்மத் கிதாப் 4 பாகங்கள் மட்டுமே தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது இதை தவிர்த்துவேறு பாகங்களில் ஒரு ஹதீஸை சொன்னால் எடுப்பது கொஞ்சம் கடினமான விடயம் தான் இப்படி இருக்க நம்தொண்டர்கள் இமாம்கள் கிதாப்களை எப்படி எடுத்து பார்ப்பார்கள் அப்படியே எடுத்தாலும் மொழியாக்கம் செய்ய தெரியாதுஅல்லவா 


அதனால் நாம் நமக்கு தோதுவான கருத்தை இமாம்கள் மீது இட்டுக்கட்டி விடுவோம் என்று தம் தொண்டர்களை ஏமாற்றிவருகிறார்கள் பீஜேவும் TNTJவும் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்


இமாம்களும் இதை சொல்லி இருக்கிறார்கள் என்று எதையாவது உங்களிம் அவர்கள் சொன்னால் நிச்சயம் அதில் பொய்பித்தலாட்டம் இருக்கும் உன்மையாக இருக்காது என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்  


பொய்யர்களிடமிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்


சூனியம் குறித்த அடுத்து வரும் 9வது பாகம் இறுதியான பாகமாக இருக்கும் 


சஹாபாக்களும் இமாம்களும் இவர்களுடைய கொள்கைக்கு எதிராகவே இருந்துள்ளார்கள் 


முஃதஸீலாக்கள் கவாரிஜிகள் போன்ற வழிகெட்ட கூட்டம் மட்டுமே இவர்கள் கையில் எடுத்து கொள்கையை ஆறம்பித்துவைத்தார்கள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் சகோதரர்களே.!


நம் அனைவருக்கும் குர்ஆன் சுன்னாஹ்வில் தெளிவை தர அல்லாஹ்விடம் துவா செய்தவனாக


வளரும் 

இன் ஷா அல்லாஹ் 


-ஆஷிம்