Saturday, 4 March 2023

சூனியம் பகுதி 6

 சூனியம் பகுதி 6

பொய்யும்-சூனியமும்

‎بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمٰنِ ٱلرَّحِيمِ

சூனியத்தை மறுக்க கூடியவர்கள் வைக்க கூடிய அனைத்து குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்களுக்கு சுருக்கமாக தெனிவான விளங்கங்களை பார்த்து வருகிறோம் 

சென்ற பாகங்களை படிக்க இந்த லிங்கில் சென்று படித்துக்கொள்ளுங்கள் 

அடுத்ததாக சூனியத்தை மறுப்போர் வைக்க கூடிய வாதம் சூனியம் என்றால் பொய் , பித்தலாட்டம் , ஏமாற்றுவேலை தான் ஒன்றமில்லாதது தான் சூனியம். 

சூனியம் என்றால் பொய் தான் என்று அல்லாஹ்வே குர்ஆனில் சிஹ்ர்(சூனியம்) என்கிற வார்த்தையை பாவிக்கிறான் அதனால் சூனியம் என்றால் பொய் தான் என்பதாக வாதம் எடுத்து வைப்பார்கள் அதனை தெளிவாக பார்க்கலாம்

"நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகம் இதுவே.

இது சூனியமா? அல்லது (இந்த நரகத்தை) நீங்கள் பார்க்க மாட்டீர்களா?

அல்குர்ஆன் 52:14-15"

இது PJவுடைய தர்ஜுமா

இந்த வசனத்தை வைத்து சூனியத்தை அல்லாஹ் பொய் என்பதாக பயன்படுத்துகிறான் என்று வாதம் வைப்பார்கள் 

உன்மையில் அல்லாஹ் பொய் என்கிற அர்த்தம் கொண்டு தான் சூனியம் என்கிற வார்த்தையை பயன்படுத்தினானா?

இவர்களிடத்தில் இருக்க கூடிய மிகப்பெரிய தவறு என்னவென்றால் ஒரு வசனத்தை வைத்து பேசும் பொழுது முன் பின் வசனங்களை பார்ப்பது கிடையாது

முன்பின் வசனம் என்ன பேசுகிறது என்றெல்லாம் ஆறாய்வது கிடையாது வேறு வசனத்தை வைத்து எப்படி விளங்குவது என்றெல்லாம் ஆய்வு செய்வது கிடையாது ஒரு வசனத்தை மட்டும் தவறான அர்த்தம் கொண்டு வாதம் வைப்பது.

சரி நாம் விளக்கத்திற்க்கு போகலாம் 

முந்தய சமுதாய மக்களிடத்திலே நபிமார்கள் பிரச்சாரம் செய்ய வந்தால் அந்த மக்கள் இரண்டு விதமான விமர்சனங்களை முன்வைத்தார்கள்

🔸நபிமார்களை பொய்யராக்கினார்கள் அவர்கள் கொண்டு வந்த வஹீ செய்திகளை பொய்யென்றர்கள்

🔸நபிமார்களை சூனியக்காரர் ஆக்கினார்கள் அவர்கள் கொண்டு வந்த அற்புதங்களை சூனியம் என்றார்கள்

இதனை பின்வரும் வசனங்கள் ஊடாக நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது இதனை சூனியம் பகுதி 4கில் நாம் சுருக்கமாக பார்த்திருப்போம் அதனை விரிவாக இதில் பார்க்கலாம் 

(நபியே! உங்களைப் பொய்யரென) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உங்களுக்குக் கவலையைத் தருகின்றது என்பதை உறுதியாக நாம் அறிவோம். நிச்சயமாக அவர்கள் உங்களைப் பொய்யாக்கவில்லை. ஆனால், இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையே (பொய்யாக்கி) நிராகரிக்கின்றனர்.

{அல்குர்ஆன்: 6:33} 

உங்களுக்கு முன்னிருந்த (நம்முடைய) பல தூதர்களும் (இவ்வாறு) பொய்யரெனவே கூறப்பட்டனர். அவர்களுக்கு நம்முடைய உதவி வரும் வரையில் அவர்கள் பொய்யரெனத் துன்புறுத்தப்பட்டதை அவர்கள் (உறுதியோடு) பொறுத்துக் கொண்டிருந்தனர். (ஆகவே நபியே! நீங்களும் அவ்வாறே பொறுத்திருங்கள்.) அல்லாஹ்வுடைய வாக்குகளை எவராலும் மாற்ற முடியாது. (உங்களுக்கு முன்னிருந்த நம்) தூதர்களின் (இத்தகைய) செய்திகள் நிச்சயமாக உங்களிடம் வந்தே இருக்கின்றன. {அல்குர்ஆன்: 6:34}

இப்படி குர்ஆன் முழுவதும் நாம் தேடிப்பார்த்தாமேயானால் முஹம்மது நபி ﷺ அவர்களையும் முன் சென்ற தூதர்களையும் பொய்யர் என மக்கள் விமர்சனம் செய்தார்கள் இதை தொடர்ந்து

அதே போன்று அல்லாஹ் ஒருவனை மட்டும் தான் வனங்க வேண்டும் என்றும் மறுமை என்கிற ஒன்று இருக்கிறது சொர்க்கம் நரகம் இருக்கிறது என்று சொன்னால் அதனை பொய் என மறுத்தார்கள்

(ஆகவே) எவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்கவேண்டும் என்பதைப் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களாகி விட்டனர். (எதிர்பாராதவாறு) திடீரென அவர்களுக்கு (விசாரணைக்) காலம் (என்ற மறுமை) வந்துவிட்டால், அவர்கள் தங்கள் பாவச் சுமைகளைத் தங்கள் முதுகுகளின் மீது சுமந்தவர்களாக "இதை (இந்த வேதத்தைப் பற்றி) நாங்கள் நம்பாத (குற்றத்)தால் எங்களுக்கு ஏற்பட்ட துக்கமே!" என்று புலம்புவார்கள். அவர்கள் சுமந்து கொண்டிருப்பவை மிகக் கெட்டவையல்லவா? அல்குர்ஆன்: 6:31)

இப்படி நாம் குர்ஆன் முழுவதும் எடுத்து பார்த்தோமேயானால் நபிமார்களை பொய்யர்கள் எனவும் நபிமார்கள் அறிவிக்க கூடிய வஹி செய்திகளை இறைவன் பற்றிய செய்திகளை மறுமை பற்றிய செய்திகளை சொர்க்கம் நரகம் பற்றிய செய்திகளை பொய் என்று சொன்னார்கள் 

அதாவது கண்ணால் பார்க்காமல் வெறும் வார்த்தைகளை கொண்டு பிரச்சாரம் செய்யும் விடயங்களை அவர்கள் பொய் என்று சொன்னார்கள் 

மறுமை சொர்க்கம் நரகத்தை நபிமார்கள் அவர்களுக்கு காண்பிக்க வில்லை கண்ணால் பார்க்காத விடயத்தை பொய் என்றார்கள் 

இதுபோன்ற சமயத்தில் அல்லாஹ் சில அற்புதங்களை நபிமார்களுக்கு வழங்கி அதை அந்த மக்களுக்கு செய்து காட்டும்படி உத்தரவிட்டான் 

இவ்வாறு நபிமார்கள் அந்த மக்களுக்கு சில சான்றுகளை  செய்து கான்பித்தார்கள் அவ்வாறு செய்து காட்டியபின் ஒரு விமர்சனத்தை வைத்தார்கள் 

இவர் இறைவனின் தூதர்னு பொய் சொல்றாரு இவர் தூதர் இல்லை என்பது முதல் விமர்சனம் 

அற்புதங்களை செய்தபின் சூனியக்காரர் என்றும் நபிமார்கள் செய்த அற்புதங்களை சூனியம் என்றும் சொன்னார்கள் 

தெளிவாக சொல்லுவதாக இருந்தால் கண்ணால் பார்க்காத மறைவான விடயங்களை குறித்து பொய் சொல்லுகிறார் என்று சொன்னார்கள் கண்ணால் பார்த்த சில விடயங்களை பொய் என்று சொல்ல முடியாது ஏன் என்றால் அது தான் கண் முன்னே இருக்கிறதே பிறகு எப்படி அதை பொய் என்று சொல்லுவது அதனால் அதனை சூனியம் என்று சொன்னார்கள் 

நபியும் நம்மை போன்று மனிதர் தான் ஆனால் இதெல்லாம் இவர் சூனியத்தின் ஊடாக செய்கிறார் இவர் சிறந்த சூனியக்காரர் என்று சொன்னார்கள் இதனை பின்வரும் வசனங்களின் வாயிலாக நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது

“மூஸாவே! நீர் உம் சூனியத்தைக் கொண்டு, எங்களை எங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காகவா நம்மிடம் வந்தீர்?” என்று கூறினான்.{அல்குர்ஆன்: 20:57}

நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை கொடுத்திருந்தோம்; அவர் அவர்களிடம் (அவற்றைக் கொண்டு) வந்தபோது (என்ன நடந்தது என்று) பனீ இஸ்ராயீல்களிடம் (நபியே!) நீர் கேளும். ஃபிர்அவ்ன் அவரை நோக்கி “மூஸாவே! நிச்சயமாக நாம் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே எண்ணுகிறேன்” என்று கூறினான். {அல்குர்ஆன்: 17:101}

மூஸா நபி அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த அற்புதங்களோடு ஃபிர்அவ்ன் மற்றும் அந்த மக்களிடம் சென்று அற்புதங்களை நிகழ்த்தும் போது அதை பார்த்த ஃபிர்அவ்ன் அதனை சூனியம் என்றான் அற்புதம் அல்லாத இறைவன் குறித்தும் வஹி செய்தி குறித்தும் அவன் சூனியக்காரர் என்று விமர்சிக்கவில்ல மாறாக 👇🏻👇🏻

இன்னும் ஃபிர்அவ்ன் சொன்னான்: “பிரமுகர்களே! என்னைத்தவிர உங்களுக்கு வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின், ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயைமூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும் - மேலும் நிச்சயமாக நான் இவரை பொய்யர்களில் நின்றுமுள்ளவர்” என்றே கருதுகின்றேன்.

{அல்குர்ஆன்: 28:38}

அற்புதம் அல்லாத மற்ற வஹி தொடர்பான விடயங்களை குறித்து பேசும் போது பொய்யர் என்றும் வஹி செய்திகளை பொய் என்று இரண்டு விதமாக விமர்சித்தார்கள்..! 

இதனை அல்லாஹ் தெளிவாக பிரித்து சொல்லுகிறான் பாருங்கள்

அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் இவர்களிலிருந்தே வந்துவிட்டார் என்பது குறித்து இவர்களுக்குப் பெரும்வியப்பு ஏற்பட்டது. நிராகரிப்பாளர்கள் கூறலாயினர்: “இவர் ஒரு சூனியக்காரர்; சுத்தப் பொய்யர் {அல்குர்ஆன்: 38:4}

இந்த வசனத்தை தெளிவாக படித்தால் நமக்கு புரியும் முதலில் சாஹிரூன்(சூனியக்காரர்) அதனை தொடர்ந்து கத்தா(ஹ)ப் (பொய்யர்) என்று மக்கள் நபிமார்களை விமர்சனம் செய்ததாக அல்லாஹ் சொல்லுகிறான் 

இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் மக்கள் நபிமார்களை பொய்யர் எனவும் சூனியக்காரர் எனவும் இரண்டு விதமாக விமர்சனம் செய்தார்கள்

அதாவது கண்ணால் பார்க்காத மறைமுகமான விடயத்தை பொய்யாக்கினார்கள்

கண்ணால் பார்த்த விடயத்தை சூனியமாக்கினார்கள்

இப்போது நாம் மேலே குறிப்பிட்ட வசனத்திற்க்கு போகலாம்

அவர்களிடம் கூறப்படும்: “இதுதான் அந்த நரக நெருப்பு; இதனைத்தான் நீங்கள் பொய்யென வாதித்தீர்கள்.

இப்போது கூறுங்கள், இது சூனியமா அல்லது உங்களுக்குப் புலப்படவில்லையா? {அல்குர்ஆன்: 52:14-15}

வசனத்தை தெளிவாக படித்தாலே நமக்கு புரியும் அல்லாஹ் முதலில் நரகத்தை கண்ணில் காட்டி இது தான்ப்பா நீ பொய்னு சொன்னியே அந்த நரகம் இது தான் அப்டீனு அல்லாஹ் நரகத்தை முதலில் அறிமுகப்படுத்துகிறான்  

அதை தொடர்ந்து அல்லாஹ் அது பொய்யா என்று கேட்க்கவில்லை மாறாக இது சூனியமா அப்டீனு கேக்குறான் ஏன் அப்படி கேட்கிறான் என்றால் 

கண்ணால் ஒரு விடயத்தை காட்டினாலும் அதை சூனியம் என்றார்கள் அதனால் தான் படிப்படியாக அல்லாஹ் விசாரிக்கறான்

🔸நீ பொய் என்று சொன்ன நரகம் இது தான் 

🔸கண்ணால் காண்பித்து இது சூனியமா..?

இதனை இன்னுமோர் வசனத்தை வைத்து தெளிவாக விளங்க முடிகிறது 

இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்).

“நம் பார்வைகளெல்லாம் மயக்கப்பட்டு விட்டன; இல்லை! நாங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு கூட்டமாகி விட்டோம்“ என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.

{அல்குர்ஆன்: 15:14-15}

அதாவது அந்த மக்களை வானத்தில் ஒரு வாசலை திறந்து வைத்து அதை அவர்கள் பார்த்தாலும் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் மாறாக இதெல்லாம் சூனியம் தான் என்று சொல்லுவார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்

அதே போன்று சூனியம் என்று வெறும் பொய் கண்கட்டி வித்தை என்று சொல்லுபவர்களுக்கு எதிராகவே இவ்வசனம் அமைந்திருப்பதை பார்க்க முடிகிறது

🔸நரகத்தை போன்று பிரம்மாண்டமாக காண்பிக்க கூடிய ஒன்று தான் சூனியம்

🔸பிரம்மாண்டமான சூனியத்தை காண்பித்தகாரணத்தால் தான் மூஸா நபி அவர்கள் அச்சம் கொண்டார்கள் 


இந்த அடிப்படையில் தான் அல்லாஹ் சூனியம் என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறானே தவிர பொய் என்கிற அர்த்தம் வைத்து அல்லாஹ் இங்கே சூனியம் என்கிற வார்ர்தையை பயன்படுத்த வில்லை இவர்கள் சூனியத்திற்க்கு வைக்கும் எந்த அர்த்தமும் குர்ஆனில் இல்லை என்பதை தெளிவாக உங்களுக்கு விளக்கி இருக்கிறேன் என்று நம்புகிறேன் 

அல்லாஹ் மிக அறிந்தவன் 

நம் அனைவருக்கும் தெளிவை தர அல்லாஹ் போதுமானவன் 

அடுத்தடுத்து வரக்கூடிய பாகங்களில் நாம் பார்க்கவிருப்பது

🟩சூனியக்காரனுக்கு அல்லாஹ்வின் ஆற்றல் இருப்பதாக நாங்கள் சொன்னொமா.?

🟩சஹாபாக்கள்/இமாம்கள்சூனியத்தை மறுத்தார்களா.?

🟩சூனியத்தை நம்பினால் காஃபிரா.?


வளரும் 

இன் ஷா அல்லாஹ் 

-ஆஷிம்

No comments:

Post a Comment