Thursday, 16 March 2023

சூனியம் பகுதி 7

 சூனியம் பகுதி 7

بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمٰنِ ٱلرَّحِيمِ


சூனியக்காரனுக்கு அல்லாஹ்வின் அற்றல் உள்ளதா?


சூனியத்தை மறுக்க கூடியவர்கள் வைக்கும் வாதங்களுக்கு தெளிவான விளக்கங்களை பார்த்து வருகிறோம் அதனைபடிக்காதவர்கள் இந்த லிங்கில் சென்று படித்துக்கொள்ளுங்கள் 


குர்ஆன் ஹதீஸில் எப்படி இவர்கள் இட்டுக்கட்டுகிறார்கள் என்று முந்தய பாகங்களில் எப்படி நாம் தெளிவுப்படுத்திவந்தோமோ அதை தொடர்ந்து இதில் நாங்கள் சொல்லாத கருத்தை நாங்கள் சொல்லுவதாக எவ்வாறு பொய் பிரச்சாரம்செய்கிறார்கள் என்பதை பார்க்கலாம் 


சூனியக்காரனுக்கு அல்லாஹ்வின் ஆற்றல் உள்ளது அவன் வேறு எங்கோ இருந்துக்கொண்டு அவன் நினைத்த அனைத்துகாரியங்களையும் செய்ய முடியும் என்று நாங்கள் சொல்வதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் 


நாங்கள் சொல்வது என்ன..?


ஒருவன் இன்ன மனிதருக்கு சூனியம் செய்வதாக சூனியம் செய்கிறான் என்றால் அந்த சூனியத்தின் மூலம் கணவன்மணைவியை பிரிப்பதை மட்டும் தான் செய்ய முடியும் அதையும் அவனால் 100% சதம் உறுதியாக செய்ய முடியுமா என்றுகேட்டால் நிச்சயமாக முடியாது 100% சதம் அல்ல 00.00% கூட அவனால் நிச்சயாம் முடியும் என்று சொல்ல முடியாது ஏன்முடியாது..?


அவன் வைத்த சூனியத்திற்க்கு தாக்கத்தை ஏற்ப்படுத்துவதும் அல்லது தடுப்பது சூனியக்காரனின் அதிகாரம் கிடையாது அதுஅல்லாஹ்வின் அதிகாரம் 


அல்லாஹ் நினைத்தால் அதை நாடுவான் நினைத்தால் நாடாமல் விட்டுவிடுவான் என்று தான் நாம் சொல்கிறோம் 

இதை நாங்கள் கற்பனையாக சொல்லுகிறோமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை குர்ஆன் வசனங்களை வைத்தே நாம்இதை சொல்லுகிறோம் 


அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது {குர்ஆன்2:102}


கணவன் மணைவியை பிரிக்க கூடிய சூனியத்தை கற்றுக்கொண்டார்கள் அதை அவர்கள் செய்தாலும் اِلَّا بِاِذْنِ اللّٰهِஅல்லாஹ்வின் கட்டளை இல்லாமல் அவர்களால் எதையும் செய்ய முடியாது என்று அல்லாஹ் இங்கு தெளிவாக சொல்லிவிட்டான்இந்த ஆதாரத்தின் அடிப்படையில் தான் நாம் சூனியத்திற்க்கு தாக்கம் இருப்பதாக சொல்லுகிறோமே தவிர வேறுகாரணம் எதுவும் இல்லை என்பதை நடுநிலை மக்கள் புரிந்துக்கொள்ளுங்கள்


இவ்வளவு தெளிவாக நாங்கள் சொன்ன பிறகும் இதனை மறைத்து எங்கள் மீது இட்டுக்கட்டி நாங்கள் சொல்லாத ஒன்றைசொல்லுவதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்


இதனைத் தொடர்ந்து 


சாதரன மனிதனுக்கு அல்லாஹ் தன் ஆற்றலை கொடுப்பானா..? நபிமார்கள் உட்பட..?


தன்னுடைய ஆற்றலை கொடுப்பது என்பது 

ஆற்றலை கொடுத்து விட்டு அதனை மனிதன் நினைத்ததை நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் செய்வது தான்அல்லாஹ்வின் ஆற்றலை பெருவது என்பது


ஒருபோதும் அல்லாஹ் தன்னுடைய தன்மையை யாருக்கும் பங்கிட்டு கொடுக்க மாட்டான்அவனுக்கு நிகர் யாரும் இல்ல 


நபிமார்களுக்கு அல்லாஹ் கட்டளை மட்டும் தான் இடுவான் இதனை செய்யுங்கள் என்று இதனை செய்துகொள்ளுங்கள் என்றுஅவர்களுடைய விருப்பத்திற்க்கு விட்டுவட மாட்டான் அதனை பின்வரும் வசனங்களை கொண்டு நாம் தெளிவாக புரியமுடியும் 


இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்நான் உங்களுக்காக களிமண்ணால் ஒருபறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடையபறவையாகிவிடும்பிறவிக் குருடர்களையும்வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்அல்லாஹ்வின் அனுமதியைக்கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்நீங்கள் உண்பவற்றையும்நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்துவைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன்நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்ஆக இருந்தால்நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்). {அல்குர்ஆன்: 3:49}


இதில் தெளிவாகவே நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது ஈஸா நபி அவர்கள் எதை செய்தாலும் அது அல்லாஹ்வின்அனுமதியை கொண்டு தான் நடக்கிறதே தவிர தன் ஆற்றலை அல்லாஹ் ஈஸா நபிக்கு கொடுத்து உங்கள் அனுமதியோடுஅதை செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை 


இறந்தோரை உயிர்ப்பிப்பேன் என்றால் இறந்தவரிடம் சென்று அவர் ஒரு செயலை செய்வார் அவ்வளவு தான் அந்தசெயலுக்கு தாக்கத்தை கொடுப்பது அல்லாஹ் தான் 

 

அன்றியும்அவனுக்கு நிகராக எவரும் இல்லை {அல்குர்ஆன்: 112:4}


இதனை நான் இங்கே சொல்ல காரணம் அற்புதம் குறித்து போதுமான அறிவு இல்லாத காரணத்தால் சில எதிர்கேள்விகளைநம்மிடம் வைப்பார்கள் 


சாதரன மனிதனுக்கு அல்லாஹ்வின் ஆற்றலை அல்லாஹ் ஒருபோதும் கொடுக்க மாட்டான் என்று PJவும் TNTJவும்சூனியத்தை பற்றி பேசும் போது இவ்வாறாக பிரச்சாரம் செய்வார்கள் 


நபிமார்களுக்கு கொடுத்து இருக்கிறானே என்று நாம் எதிர் கேள்வி கேட்டால் அது பற்றி குர்ஆனில் அல்லாஹ் தெளிவாகசொல்லி விட்டான் அதனால் கொடுத்தான் தஜ்ஜாலுக்கு கொடுப்பான் சூனியக்காரனுக்கு கொடுப்பாதாக குர்ஆனில்அல்லாஹ் சொல்லி இருக்கிறானா என்று கேட்ப்பார்கள்


கொடுக்கவே மாட்டான் என்று சொன்னீர்கள் இப்போது நபிமார்களுக்கு கொடுத்ததாக சொல்கிறீர்களே என்று எதிர் கேள்விநாம் வைத்தால் அதற்க்கு பதில் இதுவரை இல்லை


அல்லாஹ்வின் ஆற்றல் அவனுடைய தன்மை பற்றிய போதுமான அறிவு இல்லாத காரணமே இவர்கள் இது போன்றகேள்விகளை கேட்டு வருகிறார்கள்


சூனியம் குறித்து குர்ஆன் ஹதீஸில் எங்கும் வரவில்லை என்றால் அதுகுறித்து நமக்கு எந்த கவலையும் இல்லை 

குர்ஆனில் தெளிவாக சூனியம் குறித்து அல்லாஹ் பேசுகிறான் சஹீஹான ஹதீஸில் சூனியம் குறித்து வந்துள்ளது வஹிசெய்தியை பீஜேவும் TNTJவும் மறுப்பதால் தான் சூனியத்தை குறித்து நாங்கள் பேச வேண்டிய நிலைக்குதள்ளப்பட்டுள்ளோம் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்


போதுமான விளக்கத்தை கொடுத்துள்ளேன் என்று நம்புகிறேன்அல்லாஹ் அஹ்லம்


நம் அனைவருக்கு தெளிவை கொடுக்க அல்லாஹ் போதுமானவன் 


அடுத்த பாகங்களில் 

🟩சஹாபாக்கள் / இமாம்கள் சூனியம் குறித்து எந்த நிலைபாட்டில் இருந்தார்கள் 

🟩சஹீஹான ஹதீஸை ஏற்று அதில் வருவது போன்று சூனியத்தை நம்பிக்கைகொண்டால் நாம் காஃபிரா..?


போன்ற இறுதி பாகங்களை பார்க்கலாம் 

உங்கள் துவாவை என்றும் எதிர்ப்பாத்தவனாக


வளரும்

இன் ஷா அல்லாஹ் 


இப்படிக்கு 

உங்கள் ஆஷிம்



No comments:

Post a Comment