மறுக்கப்படும் ஹதீஸ்களும் அழகான விளக்கமும்
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம்
நாம் இதுவரை சில சஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரன்படுகிறது என்று மறுத்து வந்தோம், அப்படி நாம் இதுவரை மறுத்த வந்த ஹதீஸ்களில் சில ஹதீஸ்களை எந்த வித முரனும் இல்லாமல் விளங்க முடிகிறது அதனால் அது எந்த விதத்திலும் முரன்படவில்லை என்பதை தான் ஒவ்வொரு பதிவாக பார்க்கவிருக்கிறோம்
இழகுவாக புரிந்துக்கொள்ள முதலில் சின்ன சின்ன ஹதீஸ்களை அனுகுவோம் அதைத்தொடர்ந்து மற்ற சம்பவங்களுக்கு போகலாம்
முதலாவதாக கருஞ்சீரக ஹதீஸ்
அந்த ஹதீஸை படித்து விட்டு மேலும் தொடருவோம்
5688. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கருஞ்சீரக விதையில் 'சாமைத்' தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது' என்று கூறினார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்:
'சாம்' என்றால் 'மரணம்' என்று பொருள். 'அல்ஹப்பத்துஸ் ஸவ்தா' என்றால், (பாரசீகத்தில்) 'ஷூனீஸ்' (கருஞ்சீரகம்) என்று பொருள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்
இந்த ஹதீஸ் நடைமுறை படுத்த முடியாது
நிரூபிக்கப்பட்ட உன்மைக்கு எதிராக இருக்கிறது என்று சொல்லி மறுக்கப்படுகிறது
முதலாவதாக முஸ்லிம்களாகிய நாம் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும்
மருத்துவத்தை பொருத்தவரை ஒருவருக்கு மருந்து கொடுக்கப்பட்டு அங்கே அந்த மருந்து பலனின்றி அவர் மரணித்து விட்டால் இங்கே நாம் எடுக்க வேண்டியது அல்லாஹ்வுடைய நாட்டம் தான் எப்படிப்பட்ட மருத்துவம் கொடுக்கப்பட்டாலும் அங்கே அல்லாஹ் விரும்பினால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என்பதை தான் முன் நிருத்த வேண்டும்
அதே போல எப்படிப்பட்ட மருத்துவம் கொடுக்கப்போவதாக இருந்தாலும் அது உன்மையில் அந்த நோய்க்கான மருந்தாக இருந்தாலும் அங்கே குணமாக வேண்டும் என்று நோக்கம் இருந்தாலும் அல்லாஹ்வுடைய நாட்டத்தையே முன் நிருத்த வேண்டும்
இது தான் ஒரு முஸ்லிமுடைய பன்பாக இருக்க வேண்டும் இதற்க்கான ஆதாரத்தை பின்னர் தொடர்ச்சியாக பதிவு செய்வேன்
அதே போல கருஞ்சீரக ஹதீஸை பொருத்தவரை சிலர் இப்போது தான் உடல்நிலை சரியில்லாமல் நிறைய நபர்கள் இருக்கிறார்களே அவர்களிடம் கருஞ்சீரகத்தை கொடுத்து சரிசெய்ய வேண்டியது தானே என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள் அப்படியே கருஞ்சீரகத்தை சாப்பிட வேண்டும் என்றும தவறாக விளங்கி வைத்துள்ளார்கள் ஆனால் சஹாபாக்கள் இந்த ஹதீஸை எவ்வாறு விளங்கினார்கள் என்பதை பார்க்க வேண்டுமா இல்லையா..? அவ்வாறு அதையெல்லாம் பார்க்காமல் நாமாக சுயஅறிவை வைத்து மறுப்பது என்பது தவறாகும்
5687. காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார்
எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.
அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், 'நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்கள். நான், 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்
கருஞ்சீரகத்தில் மருந்து இருக்கிறது அதை நாம் தான் எடுக்க வேண்டும் என்பதை மேலே உள்ள ஹதீஸில் தெளிவாக நாம் பார்க்க முடிகிறது அதன் அடிப்படையில் அதில் மருத்துவம் இருக்கிறது அதை நாம் தான் ஆராய்ச்சி செய்து எடுக்க வேண்டும் ஒரு விடயம் சொல்லி விட்டால் அது நபியுடைய காலக்கட்டத்திலேயே நிரூபித்து காட்டி இருக்க வேண்டும் என்று சொன்னால் பல விஷயங்களை நாம் மறுக்க வேண்டி வரும் என்பதை நினைவில் வைக்க வேண்டும்
அதே போல முக்கியமான ஒரு கேள்வி அதில் மருந்து இருக்கிறதே அதை நிரூபித்து காட்டுங்கள் அப்போது தான் நம்புவோம் என்று சொன்னால் இந்த கேள்வி நபி அவர்களுடைய செயலை அவமதிப்பது போன்றாகும்
அல்லாஹ் குர்ஆனில் தேனில் மருந்து இருப்பதாக சொல்கிறான் ஆனால் எந்த நோய்க்கு என்று சொல்லவில்லை இப்போது அதை நபி அமல்படுத்திய ஒரு ஹதீஸை பார்ப்போம்
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று கூறினார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ருந்து ‘தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது” என்று கூறி)டவே, மீண்டும் நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று கூறினார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி (ஸல்) அவர்கள் அப்போதும், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று கூறினார்கள். பிறகு (நான்காம் முறை அவர் வந்து), ‘(தாங்கள் சொன்னதையே) நான் செய்தேன். (ஆனால், குணமாகவில்லை)” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது: அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று கூறினார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார்.
புஹாரி : 5684 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).
இங்கே நபி அவர்கள் தேனை மருந்தாக பயன்படுத்த சொல்கிறார்கள் அது பயன்தரவில்லை அவ்வாறு நான்கு முறை முயற்ச்சி செய்கிறார்கள் அப்போதும் பயன்தரவில்லை என்றதும் விட்டு விட்டார்களா...?
அல்லாஹ் சொல்லி விட்டான் என்று அல்லாஹ் உன்மையையே சொல்லி விட்டான் உன் சகோதரனின் வயிரு தான் பொய் சொல்லுகிறது என்று சொல்லி பிறகு மீண்டும் தேணை கொடுத்தார்கள் சரியாகி விட்டது
இப்போ நடைமுறை படுத்தினால் தான் நம்புவோம் என்று சொன்னால் அந்த நான்கு முறை நபி பயன்படுத்தி விட்டு தேனில் நிவரணம் இல்லை என்று சொன்னார்களா...? நிரூபித்தால் தான் நம்புவோம் என்றால் இங்கே நபி உடைய செயலை அவமதிப்பதாக ஆகாதா..? இதையும் சிந்திக்க வேண்டும்
அடுத்தாக கருஞ்சீரகத்தில் தான் நிவாரணம் இருக்கிறதே அப்போது நபிவுடைய காலக்கட்டத்தில் பிலேக் நோய் வந்ததே அப்போது நபி ஏன் இதை பயன்படுத்தவில்லை...? கருஞ்சீரகத்தில் மருந்து இருப்பதாக சொன்ன நபி அவர்கள் அதை நடைமுறைபடுத்தவில்லையா...? என்ற ஒரு கேள்வியையும் முன்வைக்கிறார்கள்...?
இதுவும் அவர்களின் அறியாமையை தான் காட்டுகிறது பிலேக் நோய் குறித்து வரும் செய்தியை கூட சரியாக படிக்காமல் அதன் கருத்தை உள்வாங்காமல் கேள்வியை முன்வைக்கிறார்கள்
பிலேக் நோய் குறித்து நபி அவர்கள் சொல்லும் போது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பிலேக் நோய் என்பது அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தண்டனையாக அனுப்புகின்றான், அதை மூஃமீன்களுக்கு ரஹ்மத்தாகவும் ஆக்கிவிடுகின்றான். எனவே ஒரு அடியானுக்கு பிலேக் நோய் ஏற்பட்டு, அவன் அல்லாஹ் நாடியதுதான் நடக்கும் என்று நினைத்தவனாக, தனது ஊரில் பொறுமையாக இருந்தால் அவனுக்கு ஷஹீதுடைய கூலி கிடைக்கும்.’ (புஹாரி, அஹ்மத்)
அந்த நோயை அல்லாஹ் தண்டனையாகவும் மூஃமீன்களுக்கு ரஹ்மத்தாகவும் ஆக்கிவிட்டான் இவ்வாறு இருக்கும் போது அதை சரிசெய்து இருக்க வேண்டுமே என்ற கேள்வி ஏற்புடையதா என்பதை நீங்களே சிந்தனை செய்து பாருங்கள்
அல்லாஹ் தண்டனை கொடுத்து விட்டால் அதில் இருந்து நாமாக தப்பித்துவிட முடியுமா..?
அடுத்ததாக வேறு விதமாகவும் இதை விளங்கிவிட முடியும் கருஞ்சீரகம் என்பது சுலபமாக கிடைத்து விடும் பொருளா...? அதுவும் ஒருவேலை உணவு உன்பதே அறிதான அந்த காலக்கட்டத்தில் இருந்த மக்கள் ஏன் இதை பயன்படுத்தவில்லை என்று கேள்வியும் அறியாமையை தான் காட்டுகிறது
அவர்களிடம் கருஞ்சீரகம் இருந்திருக்காது அதனால் பயன்படுத்தி இருக்க மாட்டாரகள் என்று இந்த செய்தியை விளங்க முடியாதா..?
இந்த கேள்வியும் என்ன அடிபட்டு போகிறது
அடுத்ததாக இப்போது நாம் வாழும் காலக்கட்டத்தில் மருத்துவர்கள் சொல்லும் விடயம் அவர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்கள் கருஞ்சீரகத்தில் அனைத்து நோய்க்கும் நிவாரணம் இருக்கிறது என்றும் அதை நிரூபித்துக்கொண்டும் இருக்கிறார்கள்
கூகில் யூடிபில் சென்று Benefits of black pepper என்று தேடினாலே அதனுடைய பயன்களை பார்க்க முடியும்
கிட்டதட்ட 17க்கும் அதிகமான நோய்களுக்கு நிவரணமாக கருஞ்சீரகம் அமைந்துள்ளது என்பதை நடைமுறை படுத்தியே காட்டிவிட்டார்கள் இதுவரை
நடைமுறைபடுத்தினால் தான் நம்புவோம் என்று கேள்வியும் இங்கேயும் அடிப்பட்டு போகிறது
கடைசியாக முக்கியமான ஒரு கேள்வி
4:87 அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?
இந்த குர்ஆன் வசனத்திற்க்கு முறனாக கருஞ்சீரக ஹதீஸ் இருக்கிறது
நடைமுறைப்படுத்த முடியாத ஒரு செய்தியை அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லுவார்களா என்று கேள்வியை முன்வைக்கிறார்கள்
மேலே நாம் கொடுத்த அனைத்து விளக்கத்திற்க்கும் இந்த கேள்வியும் அடிப்பட்டு போகும்
இருப்பினும் மருத்துவத்தை இஸ்லாத்தின் பார்வையில் எப்படி அனுக வேண்டுமோ அப்படி நாம் அனுகினால் நிச்சயமாக இந்த கேள்விக்கு நேரடியாகவே பதில் கிடைத்து விடும்
4432. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 39. முகமன் (சலாம்)
எந்த நோயாக இருந்தாலும் அதற்குரிய சரியான நிவாரணம் கொடுக்கப்பட்டால் அல்லாஹ்வின் அனுமதியோடு அது சரியாகி விடும்
அவ்வாறு சரியாகவில்லை என்றால் அல்லாஹ் நாடவில்லை என்று எடுத்துக்கொள்ள வேண்டும்
இதே அடிப்படையில் கருஞ்சீர ஹதீஸை அனுகுவோம்
அதில் எல்லா நோய்களுக்கும் நிவாரணம் இருக்கிறது அதை நாம் தான் எடுக்க வேண்டும் எண்ணயாக எடுத்து பயன்படுத்துவது அல்லது வேறு விதமாக பயன்படுத்துவது போன்றவைகளை நாம் தான் எடுக்க வேண்டும்
அவ்வாறு மருந்து கொடுத்தும் சரியாகவில்லை என்றால் முயற்ச்சி செய்ய வேண்டும் சரியாகவில்லை என்றால் அல்லாஹ் நாடவில்லை என்று முடிவு செய்துக்கொண்டால் இந்த ஹதீஸை இலகுவாக புரிந்துக்கொள்ள முடியும்
மறுக்கப்படும் சில ஹதீஸ்களுக்கு எந்தவித முரனும் இல்லாமல் அழகிய விளக்கம் கொடுத்து ஏற்றுக்கொள்ள முடியும்
ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற நோக்கத்திலே அனுகாமல் சஹீயான செய்தியாக இருக்கிறதே எப்படியாவது விளங்க முடியுமா என்ற நோக்கத்தில் அனுகுங்கள் நிச்சயமாக அழகாக விளங்கும்.
அடுத்தடுத்த தொடர்களில் மற்ற ஹதீஸ்களை பார்க்கலாம்
அடுத்த ஹதீஸ் குஸைமா ரலி ஹதீஸை ஆய்வில் எடுங்க
ReplyDeleteஅடுத்த ஹதீஸ் குஸைமா ரலி ஹதீஸை ஆய்வில் எடுங்க
ReplyDeleteஇன் ஷா அல்லாஹ் துவா செய்யுங்கள்
ReplyDelete(அவர்களிடம் கருஞ்சீரகம் இருந்திருக்காது அதனால் பயன்படுத்தி இருக்க மாட்டாரகள் என்று இந்த செய்தியை விளங்க முடியாதா..? )
ReplyDeleteஇதற்க்கு ஆதாரம் இருக்கா பாய் நபி ஸல் காலத்தில் கருஞ்சீரம் இருந்திற்க்காது என்பது போல் சொல்லுரிங்க அதற்க்கு எதுவும் ஆதாரம் இருந்தால் தாங்க பாய்.
5687. காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார்
ReplyDeleteஎங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.
அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், 'நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்கள். நான், 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்
கருஞ்சீரம் இருந்திருக்கின்றது என்பது இந்த ஹதீஸ் ஆதாரமாகும் நீங்க ஓர் இடத்தில் இருந்திர்க்காது என எடுத்துக்கொள்ள வேண்டாமா என்பது போல் சொன்னிங்க
பாய் பிலேக் நோய் வந்தால் மருத்துவமே பார்க்ககூடாதா பிலேக் நோய் வந்தால்
ReplyDelete( நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பிலேக் நோய் என்பது அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தண்டனையாக அனுப்புகின்றான், அதை மூஃமீன்களுக்கு ரஹ்மத்தாகவும் ஆக்கிவிடுகின்றான். எனவே ஒரு அடியானுக்கு பிலேக் நோய் ஏற்பட்டு, அவன் அல்லாஹ் நாடியதுதான் நடக்கும் என்று நினைத்தவனாக, தனது ஊரில் பொறுமையாக இருந்தால் அவனுக்கு ஷஹீதுடைய கூலி கிடைக்கும்.’ (புஹாரி, அஹ்மத்)
அந்த நோயை அல்லாஹ் தண்டனையாகவும் மூஃமீன்களுக்கு ரஹ்மத்தாகவும் ஆக்கிவிட்டான் இவ்வாறு இருக்கும் போது அதை சரிசெய்து இருக்க வேண்டுமே என்ற கேள்வி ஏற்புடையதா என்பதை நீங்களே சிந்தனை செய்து பாருங்கள் )
இப்ப பிலேக் நோய் வந்தால் (சிகிச்சை) அதாவது மருத்துவம் பார்க்கலாமா அல்லது நீங்க சொன்னது போல் அல்லாஹ் ரஹ்மத் அல்லது தண்டனையோ தெரியவில்லையே என்பது போல் எடுத்துக்கொள்வதா.
பிலேக் நோய் வந்தால் மாருத்துவம் பார்க்ககூடாதா அல்லது மருத்துவம் பார்க்கலாமா.? ஒரே குலப்பாமா சொல்லுரிங்க
ReplyDeleteஅல்லாஹ் குர்ஆனில் தேனில் மருந்து இருப்பதாக சொல்கிறான் ஆனால் எந்த நோய்க்கு என்று சொல்லவில்லை இப்போது அதை நபி அமல்படுத்திய ஒரு ஹதீஸை பார்ப்போம்
ReplyDeleteஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று கூறினார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ருந்து ‘தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது” என்று கூறி)டவே, மீண்டும் நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று கூறினார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி (ஸல்) அவர்கள் அப்போதும், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று கூறினார்கள். பிறகு (நான்காம் முறை அவர் வந்து), ‘(தாங்கள் சொன்னதையே) நான் செய்தேன். (ஆனால், குணமாகவில்லை)” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது: அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று கூறினார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார்.
புஹாரி : 5684 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).
இங்கே நபி அவர்கள் தேனை மருந்தாக பயன்படுத்த சொல்கிறார்கள் அது பயன்தரவில்லை அவ்வாறு நான்கு முறை முயற்ச்சி செய்கிறார்கள் அப்போதும் பயன்தரவில்லை என்றதும் விட்டு விட்டார்களா...?
அல்லாஹ் சொல்லி விட்டான் என்று அல்லாஹ் உன்மையையே சொல்லி விட்டான் உன் சகோதரனின் வயிரு தான் பொய் சொல்லுகிறது என்று சொல்லி பிறகு மீண்டும் தேணை கொடுத்தார்கள் சரியாகி விட்டது.
பாய் இந்த வாதமே தவறு தேனீல் நிவாரணம் உள்ளது என்று இறைவன் சொல்கிறான் எதில் என்று கூறவில்லை நபி ஸல் அவர்கள் வயிற்றுவலிக்கு நோய் அதில் உள்ளது என்று தேனை ஊற்ற சொல்கிறார்கள் நிவாரணம் ஆகவில்லை மீண்டும் ஊற்ற சொல்கிறார்கள் ஆகவில்லை அல்லாஹ் உண்மையே சொன்னான் என்று அல்லாவின் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் ஊற்ற குணம் ஆகின்றது ...
இதை போல் கருஞ்சீரகம் மரணத்தை தவிர ஷிஃபா உண்டு என்ற சஹீஹ் ஹதீஸை அனைத்து நோய்களுக்கும் நீங்கள் தான் பயன்படுத்தி நிறுவ வேண்டும் தேன் நபி ஸல் அவர்கள் அல்லாஹ் தேனீல் நிவாரணம் உண்டு என்று நம்பிக்கை வைத்து தேனை ஊற்றினார்கள் அதே போன்று நீங்களும் கருஞ்சீரகம் ஷிஃபா உண்டு என்று அனைத்து நோய்க்கும் இதே மருத்துவம் செய்ய வேண்டும் அந்த நாம்பிக்கை ஏன் உங்களிடம் இல்லை
எந்த நோய் வந்தாலும் மீண்டும் மீண்டும் கருஞ்சீரகத்தையே ஃஷிபாவாக பயன் படுத்துங்கள் அதுதான் சஹீஹ் ஹதீஸை பின் பற்றும் ஒழுங்கு உதாரணம் தேன் ஹதீஸ் மீண்டும் மீண்டும் தேனையே பயன்படுத்து நிவாரணம் ஆகின ஹதீஸ் உள்ளது.
ReplyDeleteகருஞ்சீரக ஹதீஸை உள்ளபடி ஹதீஸை பின்பற்றுங்க பாய் அதை வலைக்காதீர்கள்..தேன் உதாரணம் உங்கழுக்கே எதிரானது
மருத்துவத்தை பொருத்தவரை ஒருவருக்கு மருந்து கொடுக்கப்பட்டு அங்கே அந்த மருந்து பலனின்றி அவர் மரணித்து விட்டால் இங்கே நாம் எடுக்க வேண்டியது அல்லாஹ்வுடைய நாட்டம் தான் எப்படிப்பட்ட மருத்துவம் கொடுக்கப்பட்டாலும் அங்கே அல்லாஹ் விரும்பினால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என்பதை தான் முன் நிருத்த வேண்டும்
ReplyDeleteஅதே போல எப்படிப்பட்ட மருத்துவம் கொடுக்கப்போவதாக இருந்தாலும் அது உன்மையில் அந்த நோய்க்கான மருந்தாக இருந்தாலும் அங்கே குணமாக வேண்டும் என்று நோக்கம் இருந்தாலும் அல்லாஹ்வுடைய நாட்டத்தையே முன் நிருத்த வேண்டும் .
/////////////
ஆஸிம் பாய் கருஞ்சீரகத்திற்க்கு பொருந்தாது பாய் ஏன் என்றால் அந்த ஹதீஸ் கூறுவதே கருஞ்சீரகம் மரணத்தை தவிர அனைத்து நோய்யும் ஷிஃபா உண்டு என்று... 100% நிவாரணம் உண்டு கண்டிப்பாக உண்டு
ஆகும் ஆகாது என்று கூறுவது ஹதீஸ் மறுப்பு.
அல்லாஹ் நாடினால் குணம் ஆக்குவான் நிவாரணம் ஆகவில்லை என்றால் அல்லாஹ்வின் நாட்டம் என்று சொல்வதே அந்த ஹதீஸுக்கு முரண் ஹதீஸ் சொல்வது கண்டிப்பாக நிவாரணம் உண்டு என்பது தான் இங்கே அல்லாஹ் நாடினால் தான் நிவாரணம் கிடைக்கும் இல்லை எனில் ஆகாது என்பது ஹதீஸ் மறுப்பு...
இன்னும் உங்களுக்கு ததஜ நிலைபாடு இதில் விளங்கவில்லை போல.
உங்கள் ஆய்வுகளை மீண்டும் சரிபார்க்கவும்...
மருத்துவம் உதாரணம் கருஞ்சீரகம் ஹதீஸிர்க்கு பொருந்தாது மற்ற மற்ற மருத்துவதிற்க்கு தான் பொருந்தும் உதாரணம் தலைவழி மாத்திரை போட்டுவிட்டு அல்லாஹ் நாடினால் குணம் ஆகும் இல்லை என்றால் ஆகாமலும் போகும்.இதற்க்கு நீங்க கொடுத்த விளக்கம் பொருந்துமே தவிர கருஞ்சீரகம் ஹதீஸிர்க்கு பொருந்தாது ஏன்என்றால் கருஞ்சீரகத்தை நபி ஸல் தனித்து சிறப்பித்து சொல்லிவிட்டார்கள் கண்டிப்பாக அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உண்டு அல்லாஹ் சில நேரம் நாடுவான் சில நேரம் நாடமாட்டான் என்பது பிழை.
ReplyDeleteமறு ஆய்வு இன்னும் தெளிவாக செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கு கல்வியறிவை மேலும் அதிகப்படுத்துவானாக.
கருஞ்சீரகம் ஹதீஸ் எந்த இறை வசனத்திற்கு முரண்.?
ReplyDeleteஇதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.
அல்குர்ஆன் (41 : 42)
இது குர் ஆன் பற்றி அல்லாஹ் சொல்வது.
அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் (53 : 4)
இது ஹதீஸ் பற்றி அல்லாஹ் சொல்வது.
ஆக, நபி ஸல் அவர்கள் பேசுவது அல்லாஹ் அறிவித்து கொடுத்தவை.
கருஞ்சீரகம் தொடர்பான ஹதீஸ் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்ததாக இருந்தால் 41:42 வசனத்தின் படி அவன் புகழுக்குரிய ஞானமுடையவன்..
அவன் அறிவிப்பதில் தவறு வராது.
ஆனால் கருஞ்சீரகம் ஹதீஸ் நடைமுறையில் தவறாக உள்ளது.
ஆக, அது குர் ஆனுக்கு முரண் !
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 4:82
கருஞ்சீரகம் ஹதீஸ் மேற்கண்ட அடிப்படையில் குர்ஆனுடன் முரண்படுகின்றது என கூறுகிறேன்
ReplyDeleteகருஞ்சீரகம் பற்றிய ஹதீஸ் இந்த வசனத்துக்கு முரண்படுகிறது என்று தெளிவாக தான் வேண்டும் கருஞ்சீரகம் என்று குணம் ஆகாது என்று தெளிவாக குர்ஆனில் வரவேண்டுமா கருஞ்சீரகம் சாப்பிட்டால் மரணம் தவிர அனைத்து நோய்களும் ஷிஃபா என்று ஒரு வசனம் இருந்தால் தான் அது குர்ஆனுக்கு முரணா.? பாய் அப்படி ஒரு வசனம் இல்லாததால் இது குர்ஆனுக்கு முரண்படவில்லை என்று சொல்ல வரிங்களா.?
இது போன்ற கேள்விகள் கேட்பதே தவறு குர்ஆனுடைய போங்கை அறியாதவரே இது மாதிரியான கேள்விகளைக் கேட்பார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தையாகும். இறைவன் பயன்படுத்தும் ஒரு வார்த்தை பல்வேறு பிரச்சனைக்குத் தீர்வாக அமையக்கூடிய சிறப்பைப் பெற்றுள்ளது.
உதாரணமாக இஸ்லாத்தில் போதைப் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு நவீன காலத்தில் கஞ்சா ஹெராயின் அபின் போதை மருந்து ஊசிகள் இன்னும் பல பெயர்களில் போதைப் பொருட்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
இந்த போதைப் பொருட்கள் எதுவும் எந்தப் பெயரும் குர்ஆனில் கூறப்படவில்லை. எனவே ஒருவர் கஞ்சா குடிக்கக்கூடாது என்று குர்ஆனில் இருக்கின்றதா? அபின் சாப்பிடக்கூடாது என்று குர்ஆனில் இருக்கின்றதா? என்று கேட்டால் அவர் குர்ஆனைப் படிக்காதவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் படித்தும் புரியாதவராக இருக்க வேண்டும்.
உங்கள் கேள்வியும் இந்த வகை தான் அமைந்துள்ளது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பொய் சொல்ல மாட்டார்கள் என்று குர்ஆன் கூறுகின்றது. எதுவெல்லாம் பொய்யாக இருக்கின்றதோ அவை அனைத்தும் குர்ஆனுக்கு எதிரானவை என்று சாதாரணமாக விளங்கிக்கொள்ளளாம் நான் சொல்வது போல் அல்லாஹ் சொன்னால் தான் ஒப்புக் கொள்வேன் என்று அல்லாஹ்வுக்கே பாடம் நடத்தும் என்னவென்பது?
கருஞ்சீரக மரணத்தை தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உண்டு என்பதை நிரூபித்தாலே இந்த கருஞ்சீரகம் முறிக்கும் ஆற்றல் உண்டு என்பது உண்மையாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருஞ்சீரகத்திற்க்கு இப்படிப்பட்ட ஆற்றல் இருப்பதாகக் கூறினார்கள் என்ற இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டு பல நூற்றாண்டுகள் கடந்து விட்டன.
இத்தனை ஆண்டுகளில் உலகத்தில் இந்த ஹதீஸை 100% நம்பகூடியவர்கள் கூடஅனைத்து நோய்களுக்கும் கருஞ்சீரகத்தை உண்டு நிரூபித்துக் காட்டவில்லை. இந்த ஹதீஸ் செயல்படுத்த இயலாத செய்தி என்பதை உணர்ந்த சிலர் இதை வெளிப்படையாக மறுத்துவிடக் கூடாது என்பதற்காக தங்களுக்கு தோன்றிய கற்பனைகளைக் கூறி இதை நியாயப்படுத்த நினைக்கின்றார்கள்.
தேனை மூன்று முறை வயிற்றுவலி நிவாரணம் ஆகவில்லை நான்காவது முறை தேனில் ஷிஃபா இருப்பதில் நபி ஸல் உறுதியாக இருந்து அல்லாஹ் சொன்னது உன்மை என்று மீண்டும் கொடுத்து நிவாரணம் அடைத்தார்கள். அப்போது கூட நபி ஸல் அல்லாஹ் நாடினால் நிவாரணம் ஆகும் என்று கூறவில்லை அல்லாவின் வார்த்தை மீது நம்பிக்கை வைத்து நிவாரணம் அடைந்தார்கள்
நீங்கலோ சஹீஹ் ஹதீஸ் என கூறிக்கொண்டு பதில் இல்லாமல் அல்லாஹ் நாடினால் நிவாரணம் ஆகும் இல்லை என்றால் ஆகாது என்று ஹதீஸை மறுத்துவிட்டீர்கள்.
உங்களது வாதங்களை மீண்டும் சரிக்கானுங்கள்.
தேன் பற்றி குர்ஆன் கூறுவதை எவ்வாறு புரிந்துவைத்துள்ளீர்கள் என்பதை விளக்கம் கொடுங்க பாய் தேன் பற்றி நீங்கள் வைக்கும் வாதம் அனைத்துமே பொதுவாக உள்ளது அதாவது கருஞ்சீரகம் போல் மரணத்தை தவிர அனைத்துக்கும் தேனீல் நிவாரணம் உண்டு என்று புரிந்து வைத்துள்ளீர்களா..?
ReplyDeleteதேனை பற்றி எனது நிலைபாடு .
ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا ۚ يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
68, 69. "மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது.
திருக்குர்ஆன் 16:69
அதில் மனிதர்களுக்கும் நோய் நிவாரணம் உள்ளது என்பது மட்டுமே உள்ளது கருஞ்சீரகம் ஹதீஸ் போல் மரணத்தை தவிர அனைத்து நோய் என்று வரவில்லை எதில் எதில் நிவாரணம் உள்ளது என்று ஆய்வு செய்து அதற்க்கு பயன் படுத்திக்கொள்ளலாம் கண்டிப்பாக நிவாரணம் உண்டு
அதான் இறைவன் தெளிவாக சொல்கிறான் சிந்திக்கும் சமுதாயதிற்க்கு தக்க சாண்று உண்டு என..
தேன் வாதம் கருஞ்சீரகம் ஹதீஸ் போல் மரணத்தை தவிர அனைத்து நோய்களுக்கு நிவாரணம் உண்டு என்பது போல் வாதம் வைக்க வேண்டும்.
இன்னும் நிறைய கேள்விகள் உண்டூ நீங்கள் இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்கிறேன் என்று வாய் அளவில் சொல்கிறீர்களே தவிர உணௌமையில் ஏற்க்கவில்லை என்பது போன்ற கேள்விகள் இவைகளுக்கு பதில் கொடுங்கள் பிறகு கேள்விகளை வைக்கிறேன் இன்ஷா அல்லாஹ்..
ReplyDeleteததஜ எப்படி இந்த செய்தியை மறுக்கிறது என்பதையும் தெளிவாக பாருங்கள்..