கேள்விகள் கேட்பது அனாவசியமா?
பல விஷயங்களை கேள்வி கேட்பதின் மூலம் தான் தெளிவுபடுத்திக் கொள்ள முடியும்.
நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!
அல்குர்ஆன் 16:43
என்ற இறை வசனம், தெரியாத விஷயங்களைத் தெரியவில்லை என்று விட்டு விடாமல்,
தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
பின்வரும் வசனமும் கேள்வி கேட்பதினால் தான் பல விளக்கங்கள்
நமக்குக் கிடைக்கும் என்றுரைத்து கேள்வி கேட்பதின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
கேட்போருக்கு யூஸுஃபிடமும், அவரது சகோதரர்களிடமும் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் 12:7
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கூட இறை வேதம் தொடர்பாகச்
சந்தேகம் ஏற்பட்டால் அதற்கு முன்பாக அதைத் தெரிந்தவர்களிடம் கேட்டுத்
தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும் என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
முஹம்மதே!) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில்
இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக!
உமது இறைவனிடமிருந்தே இவ்வுண்மை உம்மிடம் வந்துள்ளது.
சந்தேகிப்போரில் நீர் ஆகிவிடாதீர்!
அல்குர்ஆன் 10:94
நபி (ஸல்) அவர்களிடம் ஸஹாபாக்களும் அன்றைய காலத்து மக்களும்
கேட்ட பல கேள்விகளை திருமறைக் குர்ஆன் பட்டியலிட்டு அதற்குப் பதில் கூறுகிறது.
பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர் (2:189)
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர் (2:215)
புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். (2:217)
மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். (2:219)
அனாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். (2:220)
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர் (2:222)
"தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை?'' என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (5:4)
"அந்த நேரம் எப்போது வரும்?'' என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். (7:187)
(முஹம்மதே!) அந்த நேரம் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். (33:63)
போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்களைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். (8:1)
(முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (17:85)
(முஹம்மதே!) துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (18:83)
(முஹம்மதே!) மலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (20:105)
கேள்வி கேட்பது அநாவசியம் என்பவர்கள் மேற்கண்ட அத்தனை
இறை வசனங்களுக்கும் இன்னும் ஹதீஸ்களில் ஸஹாபாக்கள்
நபிகள் நாயகத்திடம் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கும்
என்ன பதில் கூறப் போகிறார்கள்?
பின்வரும் ஹதீஸ்கள் மார்க்கம் தொடர்பாகக் கேள்விகள்
கேட்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.
ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
என் தோழர்கள் (நன்மை தரும் செயல்களைப் பற்றி அதிகமாகக்
கேள்விகள் கேட்டு நபி -ஸல்- அவர்கüடமிருந்து) நன்மையைக்
கற்றுக் கொண்டார்கள். நான் (தவிர்ந்து கொள்ள வேண்டும் என்ற
ஆர்வத்தில் நபி -ஸல்- அவர்கüடம் திரும்பத் திரும்பக் கேட்டு இனி
வரவிருக்கும்) தீமையைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
நூல்: புகாரி 3607

No comments:
Post a Comment