சூனியம் பகுதி 5
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
சூனியம் தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ் மற்றும் குர்ஆன் வசனங்களுக்கு தெளிவான விளக்கங்களை பார்த்துக்கொண்டுவருகிறோம்
முந்தய பாகங்களை படிக்க👇🏻👇🏻👇🏻
இவைகளை தொடர்ந்து இதில் நாம் பார்க்கவிருப்பது முஸ்னத் அஹ்மதில் வரக்கூடிய சூனியத்தை உன்மை என்றுநம்பிக்கைக் கொண்டவன் சுவனம் நுழைய மாட்டான் என்கிற ஹதீஸை தான்
TNTJவிலும் PJவிடத்திலும் ஒரு விடயத்தை நீங்கள் நன்கு கவணிக்கலாம் அரபு படிப்பதைப்பற்றி பெரிதும் பேசமாட்டார்கள்
எல்லோருக்கும் அரபு விளங்கி விட்டால் தாங்களுடைய உன்மை முகம் வெளிவந்துவிடும் என்பதால் தான் அரபு மொழியில்இவர்கள் அரசியல் செய்கிறார்கள்
ஒரு வார்த்தையை தவறாக அர்த்தம் வைப்பது கூடுதலாக இவர்களுடைய நிலைபாட்டிற்க்கு எற்றார் போல வர்த்தைகளைசேர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள்
இதை நினைவில் வைத்துக்கொண்டு பதிவை தொடருங்கள்
சூனியத்தை பொருத்தவரை அதை மறுப்பவர்களுடைய நிலைபாடு சூனியம் என்றால் பொய் என்பது தான் அதனுடையபொருளாக அவர்கள் சொல்கிறார்கள்.
சூனியம் என்கிற ஒன்று இந்த உலகத்தில் இல்லவே இல்லை சூனியம் என்பது கட்டுக்கதைகளை போன்று தான் அதைக்கொண்டு அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது அச்சம் உண்டாக்கப்படுகிறது சூனியத்தால் யாருக்கும் எந்த தீங்கும் செய்யஇயலாது அதனால் சூனியம் இருப்பதாக யாரும் நம்ப கூடாது அது உன்மை இல்லை என்கிற இவர்களுடையபிரச்சாரத்திற்க்கு இவர்களுக்கு தங்கத் தட்டில் பிரசாதம் கொடுத்த மாதிரி அமைந்த ஹதீஸ் தான் நாம் மேலே குறிப்பிட்டஹதீஸ் அதில் இவர்கள் செய்த அநியாயத்தை பார்க்கலாம்.
அந்த ஹதீஸ் முழூ வடிவம்
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ وَلَا مُدْمِنُ خَمْرٍ وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை நம்பிக்கைகொண்டவன் , (பெற்றோருக்கு) மாறுசெய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.
நூல் முஸ்னத் அஹ்மத்
இது தான் அந்த ஹதீஸ் இந்த ஹதீஸில் இவர்கள் செய்த பித்தலாட்டம் தான் சூனியத்தை நம்பிக்கை கொண்டவன் என்கிறஇடத்தில் உன்மை என்கிற வார்த்தையை சொருகி சூனியத்தை உன்மை என்று நம்பிக்கைக்கொண்டவன் சுவனம் நுழையமாட்டான் என்று பித்தலாட்டம் செய்துள்ளார்கள்
அதே ஹதீஸை அவர்களுடைய மொழியாக்கத்தை பதிவு செய்கிறேன்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறுசெய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.
நூல் : முஸ்னத் அஹ்மத்
இந்த உன்மை என்கிற வார்த்தை இருந்தாலும் இதை வைத்து இந்த ஹதீஸிற்க்கு விளக்கம் கொடுப்பது ஒன்றும் பெரியகாரியம் அல்ல இருப்பினும் இதை நாம் சுட்டிக்காட்ட காரணம் இவர்கள் எந்தவித அச்சமும் இன்றி குர்ஆன் ஹதீஸில்இட்டுக்கட்ட கூடியவர்கள் என்பதை வெளிப்படுத்தவும் அதை வைத்து மக்களை எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதைதெளிவுப்படுத்தவும் தான்
இவர்களுடைய கொள்கை சூனியம் என்றால் ஒன்றுமே இல்லை, சூனியம் என்பது இல்லைவே இல்லை அது பொய் தான். இல்லாத ஒன்றை நம்பிக்கை கொள்ள கூடாது என்றால் இருக்கிறது என்று நம்பிக்கை கொள்ள கூடாதா..? அல்லது இல்லைஎன்று நம்பிக்கை கொள்ள கூடாதா என்று ஜமாத் உறுப்பினர்கள் கேள்வி கேட்டுவிட கூடாது என்றும் அவர்கள் சிந்திக்ககூடாது என்று இவர்கள் செய்த பித்தலாட்டம் தான் "உன்மை" என்கிற வார்த்தை
ஏற்கனவே சூனியம் பொய் என்று பிராச்சாரம் செய்யும் நிலையில் சூனியத்தை உன்மை என்று நம்ப கூடாது என்று ஒரு ஹதீஸ்கிடைத்தால் உறுப்பினர்கள் இன்னும் அவர்களுடைய கொள்கையில் தங்கி விடுவார்கள் அல்லவா அதனால் தான் உன்மைஎன்கிற வார்த்தை சேர்க்கப்பட்டது
குர்ஆனிலும் ஹதீஸிலும் வரக்கூடிய வார்த்தைகளை அப்படியே வெளிப்படையாக மக்களுக்கு சொல்லி பிரச்சாரம் செய்யும்பழக்கமே இவர்களுக்கு இல்லை கூடுதலாக வார்த்தைகளை சேர்த்து சொல்லுவதே இவர்களுடைய வேலை என்பதைநினைவில் வைத்துக்கொண்டு ஹதீஸிற்க்கு போகலாம்
⭕️முதாவதாக இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடரில் பலகினமான ஹதீஸ் என்று சில இமாம்கள் விமர்சித்து உள்ளார்கள்இதை சஹீ என்றே வைத்துக்கொள்வோம் அதில் நமக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை இருப்பினும் இந்த ஹதீஸை இமாம்கள்ஹஸன் லிகைரிஹி என்ற தரத்தில் சேர்த்துள்ளார்கள்
ஹஸன் என்றால் தெரியும் இதென்ன ஹஸன் லிகைரிஹி என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்
ஹஸன் என்றால் சஹீ தரத்திலும் சேர்க்காமல் ளயிஃப் தரத்திலும் சேர்க்காமல் நடுதரத்தில் போட்டு வைக்கும் ஹதீஸ் தான்ஹஸன் என்பார்கள் வேறு எதேனும் செய்தியோடு சேர்த்து துணை ஹதீஸாக புரிந்துக்கொள்ள வேண்டி நடுதரத்தில் போட்டுவைப்பார்கள் ஆனால் இதிலும் சில வகைகள் உள்ளது தகுதி குறைந்த ஹதீஸ்களும் ஹஸன் தரம் ஹதீஸில் உள்ளதுஇவ்வாறு பிரிக்கப்பட்ட ஒன்று தான் ஹஸன் லிகைரீஹி என்று சொல்வார்கள்
இதை நான் இங்கே ஏன் சொல்லுகிறேன் என்றால்
முஹம்மது நபி ﷺ அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸ் ஒரு சின்ன விமர்சனத்திற்க்குஉள்ளாக்கப்படாத சுத்தமான ஹதீஸ்
அதற்க்கு இருக்கும் தகுதி என்ன தெரியுமா..?
மொத்தம் 9 அறிவிப்பாளர்கள் வழியாக வந்துள்ளது
வெவ்வேறு ஊர்களில் இருந்து வெவ்வேறு நாடுகளில் இருந்து 9 அறிவிப்பாளர் வழியாக வந்துள்ள ஹதீஸ்
அறிவிப்பாளர் தொடரில் எந்த குறையும் இல்லாத ஹதீஸ் இவ்வளவு தகுதி வாய்ந்த ஹதீஸை மறுக்க இவர்கள் கொண்டுவைக்கும் ஹதீஸின் தரத்தை நான் மேலே சுட்டிக்காட்டிய ஹஸன் லிகைரிஹி என்கிற தரத்தின் ஊடாக புரிந்து இருப்பீர்கள்
ஒரு ஹதீஸை தவறு என்று சொல்ல அதைவிட அறிவிப்பாளர் தொடர் மிகவும் பழமான செய்தியை கொண்டு வருவவது தானேநியாயம்..? ஆனால் இவர்கள் கொண்டு வந்திருக்கும் ஹதீஸின் நிலை நடுதரத்திலும் பலவீனமான தரம்
இவர்களுடைய கொள்கை நிலைநாட்ட நல்ல ஹதீஸ்களை பலவீனமான ஹதீஸாக பிரச்சாரம் செய்வதும் பலவீனமானஹதீஸை சரியான ஹதீஸ் என்று பிரச்சாரம் செய்வதும் இவர்களுக்கு பெரிய காரியம் அல்ல என்பதை புரிந்து இருப்பீர்கள்
⭕️இரண்டாவதாக சூனியத்தை எப்படி நம்புவது..? உன்மை என்று நம்புவதா அல்லது பொய் என்று நம்புவதா..?
எவ்வாறு நம்ப வேண்டும் என்று யாருடைய விளக்கத்தையும் தேடி அழைய வேண்டிய அவசியம் இல்லை அல்லாஹ்வே நமக்குதெளிவாக சொல்லி இருக்க..!
"அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; (குர்ஆன்2.102)"
சூனியக்காரன் எதை செய்தாலும் அவன் செய்வதெல்லாம் நிச்சயம் நடந்தே தீரும் என்று நம்பிக்கை வைக்க கூடாது.
மாறாக சூனியக்காரன் எதை செய்தாலும் அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் எதையும் அவனால் செய்ய முடியாது
அந்த சூனியத்திற்க்கு நாடுவதும் அல்லது நாடாமல் அதன் ஊடாக தீங்கு ஏற்படாமல் தடுப்பதும் அல்லாஹ்வின் அதிகாரம்தான் என்று சூனியத்தை நம்பனும்.
இது தான் இந்த ஹதீஸிர்க்கான விளக்கம் TNTJவினருடைய பீஜேவுடைய பித்தலாட்டம் இல்லாமல் இந்த ஹதீஸை இருவரியில் விளக்கி விட முடியும் இருந்தாலும் இவர்கள் அல்லாஹ்வின் பயம் இல்லாமல் எவ்வாறு பித்தலாட்டம் செய்கிறார்கள்என்பதை சொல்லுவது நம் கடமையாயிற்றே..?
ஒவ்வொரு வசனமாக தெளிவான விளக்கத்தை பார்த்து வருகிறோம் நம் அனைவருக்கும் தெளிவைத் தர அல்லாஹ்போதுமானவன்
அடுத்தடுத்து நாம் பார்க்கவிருப்பது
🟩 சூனியக்காரனுக்கு அல்லாஹ்வின் ஆற்றல் உள்ளதா.?
🟩சூனியத்தை முன் சென்ற மக்கள் மறுத்தார்களா(சஹாபாக்கள்/இமாம்கள்).?
🟩சூனியத்தை(ஹதீஸை) ஏற்றுக்கொண்டால் காஃபிரா.?
🟩கூடுதல் விளக்கத்தோடு சூனியத்தை எப்படி ஈமான் கொள்வது
வளரும்
இன் ஷா அல்லாஹ்
-ஆஷிம்
No comments:
Post a Comment