பார்த்தவுடன் தெரியும் பொய்ச் செய்திகள்!
இறைவன் எப்படி உருவானான்?
قال أخبرت عن محمد بن سجاع التلخى [ شجاع البلخى ] قال أخبرني حبان ابن هلال عن حماد بن سلمة عن أبى المهزم عن أبى هريرة قال: « قيل يا رسول الله مم ربنا من ما مرور قال لامن الارض ولا من سماء، خلق خيلا فأجراها فعرقت فخلق نفسه من ذلك العرق « وقد رواه عبد العزيز بن محمد بن أحمد بن منده عن محمد بن سجاع [ شجاع ] فقال فيه: « إن الله عزوجل خلق الفرس فأجراها
فبرقت [فعرقت ] ثم خلق نفسه منها))
هذا حديث لا يشك في وضعه، وما وضع مثل هذا مسلم، وإنه لمن أرك الموضوعات وأدبرها، إذ هو مستحيل لان الخالق لا يخلق نفسه.
அல்லாஹ்வின் தூதர் அவர்களே அல்லாஹ் எதிலிருந்து உருவானான்? என்று கேட்கப்பட்டது. அவன் பூமியிலோ வானத்திலோ உருவாகவில்லை. ஓடும் தண்ணீரிலிருந்து உருவானான்.
(எப்படி எனில்) குதிரையை இறைவன் படைத்து வேகமாக ஓடச் செய்தான். அதிலிருந்து வேர்வை வந்தது. அதிலிருந்து தன்னை படைத்துக் கொண்டான் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி),நூல் அல்மவ்ளூஆத், பாகம்:1, பக்கம் :105)
படிக்கும் போதே இது பொய்யான செய்தி என்பதை நமது அறிவு சொல்லிவிடும். குதிரையைப் படைத்து அதன் வேர்வையில் அல்லாஹ் தன்னைப் படைத்தான் என்றால் குதிரைக்கு முன்னரே இறைவன் இருந்தான் என்பது தெளிவாக விளங்கும். இது புத்தியற்றவனின் உளறல் என்று நமக்குத் தெரிந்தாலும் இதை இட்டுக்கட்டியவன் யார் என்ற விவரத்தையும் அறிஞர்கள் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
இதை பதிவு செய்த இப்னுல் ஜவ்ஸி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
الموضوعات لابن الجوزي - (1 / 105(وقد اتهم علماء الحديث بوضع هذا الحديث محمد بن سجاع ) شجاع
இந்தச் செய்தியை முஹம்மத் பின் ஷஜா என்பவன்தான் இட்டுக்கட்டி கூறியுள்ளான் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளார்கள். நூல் அல்மவ்ளூஆத், பாகம் :1, பக்கம்:105
முஹம்மத் பின் ஷஜா என்பவன் இட்டுக்கட்டிச் சொல்லும் பழக்கமுள்ளவன் என்பதை இப்னு அதீ அவர்கள் அல்காமில் என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
அப்ஸா பின்த் இக்பால்

மாஷா அல்லாஹ் அருமையான செய்தி.
ReplyDeleteஜசாகல்லாஹ் ஹைர்
Deleteஜஸாக்கல்லாஹ் ஹைரா.
ReplyDeleteஜசாகல்லாஹ் ஹைர்
Deleteஜஸாக்கல்லாஹ் ஹைரா.
ReplyDeleteJa zaakumullah haira... arumai
ReplyDeleteஜசாகல்லாஹ் ஹைர்
Deleteஇங்கையுமா
Deleteஇங்கையுமா
Delete