Friday, 25 November 2016

மத்ஹபில் இருந்து இரண்டாம் ஜமாஅத்







மத்ஹப் இமாம்கள்  இரண்டாம் ஜமாஅத் பற்றி 



இரண்டாம் ஜமாஅத் மார்கத்தில் இல்லை 
என்று கூச்சலிட்ட மத்ஹப் வாதிகள் 

அவர்கள்ஏ ற்றுக் கொண்ட இமாம் ஷாபி மற்றும் ஹன்பலி அவர்கள் இரண்டாம் ஜமாஅத் தவறில்லை என்று 
கூறுகிறார்கள் 

ஆதாரங்கள் பின்வருமாறு


முதாலவதாக இமாம் ஷாபி அவர்கள்  

ஒரே பள்ளியில் மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவதில் எந்தத் தவறும இல்லை. ஏனென்றால் பள்ளியில் உள்ள அனைத்து மக்களுமே சமமானவர்கள் தான். (பள்ளிவாசல் என்பதே) ஜமாஅத்தாக தொழுகையை நிறைவேற்றுவதற்காகத் தான். இதுதான் வீதிகளின் ஓரங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்குரிய சட்டமுமாகும். அங்கு மீண்டும் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதில் எந்தத் தவறும் இல்லை.

ஆதாரம்: ஹனஃபி மத்ஹப் நூல் அல்மப்சூத்

பாகம்: 1, பக்கம்: 39

இரண்டாவதாக இமாம் ஹன்பலி அவர்கள்


1

مسألة) * (ولا تكره اعادة الجماعة في غير المساجد الثلاثة) معنى اعادة الجماعة انه إذا صلى امام الحي وحضر جماعة أخرى استحب لهم أن يصلوا جماعة وهذا قول ابن مسعود وعطاء والحسن والنخعي واسحق. ( الشرح الكبير لابن قدامة - (ج 2 / ص 7)

மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது என்பதின் கருத்தாகிறது ஒரு பகுதியின் இமாம் தொழுகை நடத்தி முடித்த பிறகு வேறொரு ஜமாஅத்தினர் அங்கு வந்தால் அவர்கள் ஜமாஅத்தாக தொழுவது விரும்பத் தக்கதாகும். இதுதான் இப்னு மஸ்வூத்(ரலி) அதாவு, ஹஸன், மற்றும இப்ராஹிம் நகயீ, இஸ்ஹாக் ஆகியோருடைய கருத்துமாகும்


ஆதாரம் : ஹன்பலி மத்ஹப் நூல் அஷ்ஷரஹல் கபீர் லிஇப்னி குதாமா பாகம் : 2 பக்கம் : 7)


2

وقال مالك والثوري والليث وابو حنيفة والشافعي لا تعاد الجماعة في مسجد له امام راتب في غير ممر الناس ومن فاتته الجماعة صلى منفردا لئلا يفضي إلى اختلاف القلوب والعداوة والتهاون في الصلاة مع الامام، ولانه مسجد له امام راتب فكره فيه اعادة الجماعة كالمسجد الحرام ولنا عموم عليه السلام صلاة الجماعة تفضل على صلاة الفذ بخمس وعشرين درجة وروى أبو سعيد قال جاء رجل - وقد صلى رسول الله صلى الله عليه وسلم - فقال أيكم يتجر على هذا؟ فقام رجل فصلى معه قال الترمذي هذا حديث حسن ورواه الاثرم وفيه فقال ألا رجل يتصدق على هذا فيصلي معه؟ وروى باسناده عن أبي امامة عن النبي صلى الله عليه وسلم مثله وزاد فلما صليا قال وهذان جماعة ولانه قادر على الجماعة فاستحب له كالمسجد الذي في ممر الناس وما قاسوا عليه ممنوع ( الشرح الكبير لابن قدامة - (ج 2 / ص 7)

ஜமாஅத் தொழுகை நடந்த பள்ளியில் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவதற்கு நம்முடைய ஆதாரமாகிறது தனியாகத் தொழுவதைவிட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும் என்று வரக்கூடிய நபியவர்களின் பொதுவான கட்டளையாகும். மேலும் அபூ ஸயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபியவர்கள் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் வந்தார். உங்களில் யாராவது ஒருவர் இவரோடு தொழுது இவருக்கு தர்மம் செய்ய மாட்டாரா? என்று நபியவர்கள் கூறினார்கள் என்ற ஹதீஸம் நமக்குரிய ஆதாரமாகும். இதே ஹதீஸிற்குரிய அறிவிப்பாளர் வரிசையில் அபூ உமாமா (ரலி) அவர்கள் வாயிலாக பின்வரும் அதிகப்படியான கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. அவர்கள் இருவரும் தொழுது முடித்தபோது நபியவர்கள் இந்த இருவரும் ஜமாஅத் ஆகும் என்று கூறினார்கள.

ஆதாரம் : அஷ்ஷரஹல் கபீர் பாகம் : 2 பக்கம் : 7


அல்லாஹ் என்ன சொன்னாலும்
நபி ஸல் எதை சொல்லி இருந்தாலும்

இவை இரண்டையும் விட எங்களுக்கு
இமாம்கள் தான் முக்கியம் என்று
இமாம்களை தூக்கி பிடிக்கும்
இந்த சுன்னத் ஜமாத்தினர்
அவர்கள் மத்ஹபில் அவர்கள் ஏற்றுக் கொண்ட
இமாம்கள் கருத்தை கூட கண்டும் காணமால் இருப்பது வேடிக்கையாக உள்ளது

பள்ளிக்கு தாமதமாக வருவதை தடை செய்யும்
மத்ஹப்வாதிகள் மத்ஹபையே பின்பற்றாதவர்கள் .

இன்னும் சொல்லுவதாக இருந்தால் இவர்கள்
நபிவழிக்கு மட்டும் மாற்றமானவர்கள் இல்லை

அவர்கள் ஏற்றுக் கொண்ட மத்ஹபிர்க்கே மாற்றமானவர்கள்
என்பது தெளிவாகிறது

எனவே மத்ஹப்வாதிகள் மத்ஹபில் நம்பிக்கை
கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் இரண்டாம் ஜமாஅத்
நடத்த தடை செய்ய கூடாது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்

புரிந்துக் கொள்வது மட்டுமில்லாமல்
இதை நடைமுறைபடுத்தவும் வேண்டும்

செய்வார்களா..?

எதை சொன்னாலும் கிதாபில் இருந்து
எடுத்து காட்ட முடியுமா என்று வெத்து சவால் விடும்
வலிகேடர்களுக்கு இதோ கிதாபில் இருந்தே எடுத்து கட்டி உள்ளேன்

நபி ஸல் அவர்கள் காலத்திலே தோன்றியது சுன்னத் ஜமாஅத் என்று சொல்லிக்கொண்டு மத்ஹப் குப்பைகளை தூக்கி பிடிக்கும் சுனத்தை பேணாத சுன்னத் ஜமாதினருக்கு என் சவால்

பிஜேவை முர்தத் என்று சொல்லித் திரியும் தக்லீத் வாதீகளுக்கு என்னுடைய சவால்

உங்கள் கூற்றுக்கு எதிராக உள்ள உங்கள் இமாம்களை முர்தத் என்று சொல்ல தயாரா ..?


தொடரும்






1 comment:

  1. மாஷா அல்லாஹ் சூனா ஜமாத்திற்கு தகுந்த பதிலடி இனி தலையில் தலைப்பாகை கவிழ்த்திக்கிட்டு கம்பு சுத்த வரமா்டார்கள்.

    ReplyDelete