Friday, 17 February 2023

சூனியம் பகுதி 2

 சூனியம் பகுதி 2 

பகுதி ஒன்றை படிக்க 👇🏻👇🏻

சூனியம் பகுதி 1 


முன்னைய பகுதியில் சூரா அல்பகரா உடைய 102வது வசனத்தில் ஹாரூத் மாரூதிடமிருந்து “கணவன் மணைவியைபிரிக்கக் கூடிய சூனியக் கலையை கற்றுக்கொண்டார்கள் என்பதை பார்த்தோம் 


கணவன் மணைவி பிரிவு என்பது சாதரன விடயம் அல்ல ஒரு சந்ததியை இல்லாமலாக்கும் மிகப்பெரிய செயலாகும்


ஸாலிஹான மனைவி கிடைப்பதே இவ்வுலகில் கிடைக்கும் அனைத்தையும் விட சிறந்தது ஆகும்” என்று சொல்லும்அளவுக்கு இஸ்லாம் திருமனத்தை சிறப்பித்து பேசுகிறது.

அதற்கு நேர் எதிராக கணவன் மனைவிக்கிடையில் பிரிவினையை உண்டாக்கி திருமன உறவை முறிப்பதேஷைத்தான்களிடத்தில் மிகச்சிறந்த காரியமாக காணப்படுகிறது.


இது பற்றி ஓர் செய்தி:


إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَشَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ - قَالَ - فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ ‏"‏ ‏.‏ قَالَ الأَعْمَشُ أُرَاهُ قَالَ ‏"‏ فَيَلْتَزِمُهُ


அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள் :


இப்லீஸ்தனது சிம்மாசனத்தை (கடல்நீரின் மீது அமைக்கிறான்பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையேஅனுப்புகிறான்அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ )வனே இப்லீஸிடம் மிகவும்நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான்அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து "நான் இன்னின்னவாறுசெய்தேன்'' என்று கூறுவான்அப்போது இப்லீஸ், "(சொல்லிக் கொள்ளும் அளவுக்குநீ எதையும் செய்யவில்லை'' என்றுகூறுவான்பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, "நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவைஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை'' என்று கூறுவான்அப்போது இப்லீஸ்அவனை அருகில் வரச் செய்து, "நீதான் சரி(யான ஆள்)'' என்று (பாராட்டிக்கூறுவான். (முஸ்லிம்: 2813)


சாதரனமாக பொய் சொல்லி கணவன் மணைவியை பிரிப்பதில் தாக்கம் இருந்தாலும் இலகுவாக அவர்கள் மீண்டும்சேர்வதற்கு அதிக வாய்புள்ளதுஆனால் அதுவே சூனியத்தின் மூலம் பிரிவு ஏற்பட்டு விட்டால் பிரச்சனையைபுரிந்துக்கொண்டு மீண்டும் சேருவது என்பது இலகுவான காரியம் அல்லசூனியத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்குணமடையாத வரைக்கும் அவர்களால் சேர்ந்து வாழ்வது கடினமான காரியமே (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்)


ஹாரூத் மாரூதிடமிருந்து கற்றுக் கொண்ட கணவன் மனைவியை பிரிக்கும் சூனியமானது மிக மோசமான அறிவுஎன்பதால்தான்  2:102 வது வசனம் அவர்கள் கற்றுக் கொண்ட அறிவை (சூனியத்தைபற்றி சொல்லும் போது அதுஅவர்களுக்கு தீங்கை தவிற எந்த நன்மையையும் தராது மறுமையில் அவர்களுக்கு எந்த பயனுமில்லை என்று குறிப்பிடுகிறது,



** அடுத்த விடயம் சூரா அல்பகரா 102 வது வசனத்திற்க்கு நாம் கொடுக்கும் விளக்கம் நபி  அவர்களுக்கு லபீத் பின்அஹ்ஸம் சூனியம் செய்ததாக வரக்கூடிய ஹதீஸ் 100%க்கு 200% வீதம் பொருந்த கூடியதாக இருக்கிறது பின்வரும்விடயங்களை கொண்டு புரிந்து கொள்ளலாம்.


அந்த ஹதீஸ் சுருக்கமாக

ஆயிஷா(ரலிஅறிவித்தார் 

இறைத்தூதர்(ஸல்அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதுஅதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயேஅவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள் (புகாரி 5765)


கணவன் மனைவிக்கிடையே பிரிவினை ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் தாமத்தியத்தில் குறைபாடு இருப்பதேயாகும்இந்த காரணத்தினால் அவர்களுக்கிடையே நிரந்தர பிரிவு ஏற்படுவது நிச்சயம்


நபி (ஸல்அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட போது அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தாம்பத்தியத்திலே ஆகும் அதாவது தம்மனைவியரோடு தாம்பத்தியத்தில் ஈடுபடாமலே ஈடுபட்டதாகவும்அப்படியான ஒரு வலியையும் உணருகிறார்கள்இவ்வாறானஒரு நிலைமை கணவன் மணைவிக்கிடையில் நீடிக்குமாக இருந்தால் நிச்சயம் அது நிரந்தர பிரிவை ஏற்படுத்தி விடும்(அல்லாஹ் அவர்களை அதிலிருந்து பாதுகாத்து விட்டான்).

அது மாத்திரமல்லாது சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸ்களில்சூனியம் செய்யப்பட்டவரோ அல்லதுசூனியத்திலிருந்தோ எவ்வாறு பாதுகாப்பு பெறுவது என்பது பற்றியும் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளதுஎனவேதான்2:102 வது வசனத்தோடு சூனிய ஹதீஸ் மிகவும் பொருந்திப்போகிறது என்று கூறுகிறோம்அல்ஹம்துலில்லாஹ்


** மற்றது இதை தவிர்த்து அவர்கள் மற்ற விடயத்தில் குழப்பம் வந்ததா என்று கேட்டால் அப்படி எந்த பாதிப்பும் அவர்களுக்குஏற்படவில்லை 


இந்த ஒரு செயலை வைத்து ஒரு நபரை பைத்தியம் என்று சொல்ல முடியுமா என்று கேட்டால் நிச்சயமாக முடியாதுமனரீதியான ஒரு குழப்பம் கலந்த ஒரு பாதிப்பு தானே தவிர இது பைத்தியம் சார்ந்த செயல் அல்ல.

ஆனாலும் இந்த ஹதீஸை மறுப்பதற்காக சகோபீஜே அவர்கள்: “சூனியம் பற்றிய ஹதீஸ்கள் யாவும் நபி (ஸல்அவர்களைபைத்திய காரராக சித்தரிக்கிறது” என்று குறிப்பிடுகிறார். (இது ஆச்சரியமான விடயமே)


அந்த ஹதீஸ்களை படிக்கும் போதுதாம்பத்தியத்தியத்தை தவிற வேறு எதிலும் நபியவர்களுக்கு குழப்பம் இருந்ததாக எந்தசெய்தியும் காணமுடியாது அப்படியான செய்திகளுக்கு பீஜெ சொல்லும் வியாக்கியானம் ஆச்சரியமானதே


மாறாக அந்த செய்தியிலேயே நபி (ஸல்அவர்கள் எவ்வளவு தெளிவாக இருந்தார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது


1- தனக்கு தாம்பத்தியத்தில் பிரச்சினை இருக்கிறது என்பதை உணர்ந்து அதிலிருந்து குணமடைய அல்லாஹ்விடம் துவாசெய்துள்ளார்கள்

2- நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோஅந்த விஷயத்தில்அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான்”. என்று ஆயிஷா (ரழிஅவர்களிடம் நபியவர்கள் சொன்ன செய்தி


இவ்விரு விசயங்களே போதும் நபியவர்கள் எவ்வளவு தெளிவாக இருந்திருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு இருந்தபிரச்சினையே தாம்பத்தியத்தில் மாத்திரமே என்பதும் தெளிவாக புரிந்து கொள்ள.


குறிப்பு *பீஜே சொல்வது போலநபியவர்களுக்கு பைத்தியம் கிடையாது மாறாகஇவ்வளவு தெளிவான செய்தியை புரிந்துகொள்ளாமல் குழம்பியிருக்கும் நாம் வேண்டுமானால் பைத்தியமாக இருக்கலாம்*


அதே போன்று மற்றொரு ஹதீஸையும் உங்களுக்கு ஆதாரமாக பதிவு செய்ய விரும்புகிறேன் 


புகாரி 

5469. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலிகூறினார் 

மக்காவில் (என் புதல்வர்அப்துல்லாஹ் இப்னு ஸுபைரை நான் கருவுற்றேன்கர்ப்ப காலம் முழுமையடைந்துவிட்டநிலையில் புறப்பட்டு நான் மதீனா சென்றேன். (வழியில்) “குபாவில்ழூழூ தங்கினேன்குபாவிலேயே எனக்குப்பிரசவமாம்விட்டதுபிறகு குழந்தையை இறைத்தூதர்(ஸல்அவர்களிடம் கொண்டு சென்று அவர்களின் மடியில் வைத்தேன்பிறகு நபி(ஸல்அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கொண்டு வரச்சொல்லி அதை மென்று குழந்தையின் வாயில்உமிழ்ந்தார்கள்அப்துல்லாஹ்வின் வயிற்றுக்குள் சென்ற முதல் (உணவுப்பொருள் இறைத்தூதர்(ஸல்அவர்களின் உமிழ்நீராகத்தான் இருந்ததுபிறகுஅவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று அப்துல்லாஹ்வின் வாயில் அதை இட்டார்கள்பின்னர்அப்துல்லாஹ்வுக்கு சுபிட்சம் (பரக்கத்வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள். (என் புதல்வர்அப்துல்லாஹ்தான்இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தையாவார்எனவேமுஸ்லிம்கள் அவர் பிறந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்ஏனெனில்அவர்களிடம், “யூதர்கள் உங்களுக்கு சூனியம் வைத்துவிட்டார்கள்எனவேஉங்களுக்கு (இனிகுழந்தைபிறக்காது“ எனக் கூறப்பட்டுவந்தது.


இந்த ஹதீஸை கூட ஆழ்ந்து சிந்திக்கும் போது அவர்களால் செய்யப்பட்ட சூனியம் தாம்பத்தியத்தில் பிரச்சினைஏற்பாடுத்துவதற்கான சூனியம் என்பதையே புரிந்து கொள்ள முடிகிறது.

1- தாம்பத்தியத்தில் பிரச்சினையை ஏற்படுத்தி விட்டாலும் அல்லது

2- தாமத்தியத்தில் ஏற்படும் பிரச்சினையால் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போனாலும் இருதியில் பிரிவு ஏற்படும்வாய்ப்பே அதிகம்.

நான் மேலே சொன்னது போன்று கணவன் மணைவி பிரிவு என்பது ஒரு சந்ததியையே உண்டாகாமல் தடுக்கும் ஒரு செயல்அந்த அடிப்படையில் தான் இங்கே சூனியம் வைக்கப்பட்டுள்ளது.


பிள்ளை பிறந்த போது மக்கள் சந்தோசப்படுகிறார்கள் இந்த நேரத்தில் இரண்டு விசயங்களை நாம் கவனிப்பது கொண்டுசூனியம் என்பது உண்மை அதற்கு தாக்கம் இருக்கிறது அதையே குர்ஆனும் ஹதீஸ்களும் சொல்கின்றன என்பதை புரிந்துகொள்ளலாம் 

1- மக்கள் சந்தோசப்படும் போது நபி (ஸல்அவர்கள் அந்த மக்களிடம் எதற்காக சந்தோசப்படுகிறீர்கள் சூனியம் என்பதேகிடையாது அதனால் எதுவும் ஆகாது என்று அறிவுரை சொன்னதாகவே!

2- சூனியத்தை பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள் சூனியம் என்பதே கிடையாதே என்று சொன்னதாகவோ எந்த ஒருஹதீஸையும் காணவில்லை.

ஏனெனில் சந்தர்ப்பத்திற்கு தேவயைான அறிவுரைகளை வழங்குவதே வஹியின் முக்கிய நோக்கமாகும் இங்கு *மக்கள்சூனியத்தினால் தாக்கம் ஏற்படும் என்று பயந்த போதும் அதனால் தாக்கம் ஏற்படவில்லை என்று சந்தோசப்பட்ட போதுநபியவர் எதுமே சொல்லாது அதனை ஏற்றுக் கொண்டிருப்பதேசூனியம் உண்மை அதற்கு அல்லாஹ் நாடினால் தாக்கம்உண்டு என்பதை உருதி செய்கிறது.


(குறிப்புஅஸ்மா ரலி ஹதீஸை பீஜே மறுக்கவில்லை)


இந்த அடிப்படையில் நபிகளாருக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸ் தெளிவான முறையில் குர்ஆனோடுகுர்ஆன் வசனத்திற்க்கு விளக்கம் தரக்கூடிய அடிப்படையில் தான் இருக்கிறதே தவிர 


எந்தவித முறனும் இல்லை என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் 


அடுத்து வரக்கூடிய பாகங்களில் 

1.சூனியக்காரன் எப்படி வந்தாலும் வெற்றிப்பெற மாட்டான் என்கிற வசனத்தை எப்படி புரிந்துக்கொள்வது.?

2.நபிமார்களை பார்த்து சூனியக்காரர்கள் என்று மக்கள் எந்த அடிப்படையில் சொன்னார்கள்.?

3.நபி மூஸா(அலைஅவர்கள் சூனியம் சம்பவத்தில் நடந்தது என்ன.?

4.அல்லாஹ் தன் ஆற்றலை மனிதனுக்கு கொடுப்பானா.?


வளரும் 


-ஆஷிம் (எ) சித்திக் அகமது

No comments:

Post a Comment