சூனியம் பகுதி 3
பகுதி ஒன்றில் அல்பகரா 102 வசனத்தின் விளக்கத்தையும்
பகுதி இரண்டில் நபி ﷺ அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரும் ஹதீஸ் எப்படி அல் பகரா 102 வசனத்தோடுஒத்துப்போகிறது என்பதையும் பார்த்தோம்
பகுதி 1 மற்றும் 2 படிக்க 👇🏻👇🏻👇🏻
அதைத்தொடர்ந்து பகுதி மூன்றில் நாம் பார்க்கவிருக்கும் தலைப்பு
சூனியக்காரன் வெற்றிபெர மாட்டான் குர்ஆன் 20:69
இந்த வசனத்தை வைத்து தான் பீஜே அவர்கள் மக்களை ஏமாற்றி வருகிறார்
ஆறம்பத்திலேயே பீஜேவை இழுக்க காரணம் என்ன என்பதை போக போக நீங்களே புரிந்துக்கொள்வீர்கள்
இந்த சூனியக்காரன் வெற்றிபெர மாட்டான் என்று அல்லாஹ் எங்கே பயன்படுத்துகிறான் என்றால் மூஸா நபிஅவர்களிடத்தில் ஃபிர்அவ்ன் சவால் விட்டு மக்கள் மத்தியில் போட்டிக்காக சென்று போட்டியிட்ட அந்த சம்பவத்தில் தான்பயன்படுத்துகிறான்
நம்முடைய விளக்கத்திற்க்கு முன்பு சூனியத்தை மறுப்போர் பீஜேவால் அவருடைய தந்திரத்தால் எப்படி சிந்திக்காமல்நம்மிடம் கேள்வி வைக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறேன்
மூஸா நபியிடம் அந்த சூனியக்காரர்கள் செய்தது பீஜேவை பொருத்தவரை Magic அதாவது தந்திரம்
அதாவது லபீத் என்கிற யூதன் அல்லாஹ்வின் தூதருக்கு செய்தானே அந்த சூனியத்தை இங்கே அவர்கள் செய்யவில்லைதந்திரத்தை தான் செய்தார்கள் பீஜேவை பொருத்தவரை
அவருடைய ஏமாற்றுவேலைகளை பார்க்கலாம்
"உமது கைத்தடியைப் போடுவீராக!" என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையைவிழுங்கியது- அல்குர்ஆன் 7:117
இங்கே பீஜே என்ன சொல்கிறார் என்றால் வித்தையை விழுங்கியது மூஸா நபி கைத்தடியை போட்ட உடன் அது அந்தவித்தைக்காரர்கள் உடைய வித்தையை விழுங்கியது
"மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?" என்று அவர்கள் கேட்டனர்- அல்குர்ஆன் 7:115
இதெல்லாம் பீஜே மொழியாக்கம் செய்த தர்ஜுமாவில் இருந்து பதிவு செய்து இருக்கிறேன்
பீஜேவை பொருத்தவரை மூஸா நபி அவர்கள் சம்பவத்தில் அந்த வித்தைக்காரர்கள் செய்தது வித்தை தானே..?
இப்பொழுதும் மேடைகளில் செய்யக்கூடிய மேஜிக் இதைத் தான் அந்த சூனியக்காரர்கள் செய்தார்கள்
அந்த சம்பவத்தை எல்லாம் குறிப்பிடும் போது வித்தை வித்தை வித்தை என்று சொன்ன அண்ணன் பீஜே அவர்கள்
வித்தையை செய்தார்கள் என்று பிராக்கட்டில் மொழியாக்கம் செய்து வைத்துவிட்டு
இந்த வித்தைக்காரர்கள் வெற்றிபெர மாட்டார்கள் என்று அல்லாஹ் சொன்னதை மட்டும் (பீஜேவை பொருத்தவரை அவர்கள்வித்தைக்காரர்கள்)
இவருடைய விளக்கத்திற்க்கு முறனாக முஹம்மத் நபி ﷺ அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸோடுஇனைத்து அந்த வசனத்திற்க்கு முறனாக இருக்கிறது என்று சொல்லி மறுக்கிறார்
லபீத் ( நபிக்கு சூனியம் வைத்தவன்) உன்மையான சூனியக்காரன் ஆனால் ஃபிர்அவ்னுடைய கூட்டமோ வித்தைக்காரர்பீஜேவின் விளக்கத்தின் அடிப்படையில்
இப்பொழுதும் மேடைகளில் செய்யக்கூடிய சூனியத்தை தான் அவர்கள் செய்தார்கள் என்று பீஜே சொல்லுவதால்
அவரை பொருத்தமட்டில் ஃபிர்அவ்னுடைய கூட்டம் வித்தைக்கார கூட்டம் தானே தவிர சூனியக்கார கூட்டம் அல்ல
அதனால் வித்தைக்காரன் எங்கு வந்தாலும் வெற்றிபெர மாட்டான் என்று வசனம் சொல்லுகிறது (பீஜேவின் தர்ஜுமாவின்அடிப்படையில்)
அவருடைய நிலைபாட்டின்படி சூனியக்காரன்(வித்தைக்காரன்) எங்கு வந்தாலும் வெற்றிபெர மாட்டான் என்கிற வசனம்
அல்லாஹ்வுடைய தூதருக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரும் ஹதீஸ் இந்த வசனத்திற்க்கு முறன் இல்லை
இது எதிர்வாதம் வைக்கவே மேலே நாம் வைத்த கேள்விகளே தவிர அவை நேர்மையான பதில் அல்ல
அவருடைய பித்தலாட்டத்தை உங்களுக்கு தெளிவுபடுத்தவே அவ்வாறான எதிர்கேள்விகளை வைத்தோம்
சூனியக்காரன் வெற்றிபெர மாட்டான் குர்ஆன் 20:69
இந்த வசனத்தை எவ்வாறு புரிந்துக்கொள்வது
வெற்றி என்பது எதிரே இருப்பவனை தோற்கடித்து முலுவதுமாக வீழ்த்துவது தான் வெற்றி
போட்டியாக இருந்தாலும் வேறு எந்த செயலாக இருந்தாலும் ஒருவன் ஒரு தாக்கத்தை ஆறம்பத்தில் ஏற்படுத்தி விட்டாலேஅவன் வெற்றியாலன் என்பதல்ல வெற்றி
இறுதியாக இருவரில் யார் முலுவதுமாக தோற்க்கடிக்கப்படுகிறார்கள் என்பது தான் வெற்றி
மூஸா நபி உடைய சம்பவத்தில் சூனியக்கார கூட்டம் அவர்களுடைய அந்த கைத்தடியை போட்டு சூனியம் செய்துமக்களுடைய கண்களை வயப்படுத்தி திடிக்கிடும்படியான ஒரு மகத்தான சூனியத்தை செய்கிறார்கள்
அதை பின்வரும் வசனத்தில் பார்க்கலாம்
அதற்கு (மூஸா), “நீங்கள் (முதலில்) எறியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தனர்.
அல்குர்ஆன்: 7:116
அங்கே இருந்த மக்களுக்கு மட்டும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தினார்கனா என்று கேட்டால் இல்ல மூஸா நபிஅவர்களுக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டது
அல்லாஹ் வஹியின் மூலம் அவர்களுக்கு தெளிவு படுத்த கூடிய விதத்தில் இருந்தது என்பதையும் பின்வரும் வசனத்தின்வாயிலாக நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது
அப்போது, மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார்.
அல்குர்ஆன்: 20:67
“(மூஸாவே!) நீர் பயப்படாதீர்! நிச்சயமாக நீர் தாம் மேலோங்கி நிற்பீர்!” என்று நாம் சொன்னோம்.
அல்குர்ஆன்: 20:68
தான் வொற்றிக்கொள்வோமா என்கிற அளவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் சூனியக்காரர்கள் செய்த சூனியத்தின்தாக்கம் இருந்தது என்பதை இதன்வாயிலாக நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது
ஃபிர்அவ்ன் சாதாரன சூனியக்கார கூட்டத்தை அழைத்து வரவில்லை அவன் எந்த அளவுக்கு மிகப்பெரிய சூனியக்காரகூட்டத்தை அழைத்து வந்தான் என்பதை இப்போது பார்க்கலாம்
மூஸா நபி அவர்களுக்கு அல்லாஹ் ஒன்பது அற்புதங்களை கொடுத்தான் ஒன்று கைத்தடியை போட்டால் அது பாம்பாகமாரும் மற்றொன்று மூஸா நபியவர்கள் தங்களுடைய சட்டைப்பைக்குல் கை விட்டால் மாசற்ற மிகப்பெரிய ஒளியாமகவெளிவரும் இதல்லாது மீதம் ஏழு அற்புதங்களை அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்தான் அவை பின்வருமாறு
“இன்னும் உம்முடைய கையை உமது (மார்பு பக்கமாக) சட்டைப் பையில் நுழைப்பீராக!” அது ஒளி மிக்கதாய் மாசற்றவெண்மையாக வெளிவரும். (இவ்விரு அத்தாட்சிகளும்) ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய சமூகத்தாருக்கும் (நீர் காண்பிக்கவேண்டிய) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராக இருக்கின்றனர்.
அல்குர்ஆன்: 27:12
இந்த ஒன்பது சான்றுகளோடு ஃபிர்அவ்னிடம் அல்லாஹ் அவர்களை அனுப்புகிறான்
மூஸா நபி அவர்கள் அந்த கூட்டத்திடம் சென்று தம் கைத்தடியை போடுகிறார்கள் அது உன்மையான பாம்பாக மாறியது நாம்கவணிக்க வேண்டிய விஷயம் அவருடைய கைத்தடி பாம்பை போல தோற்றத்தை ஏற்படுத்த வில்லை உன்மையானபாம்பாகவே மாரியது
இதை பார்த்த ஃபிர்அவ்ன் பின்வருமானு கூறுகிறான்
“மூஸாவே! நீர் உம் சூனியத்தைக் கொண்டு, எங்களை எங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காகவா நம்மிடம் வந்தீர்?” என்று கூறினான்.
அல்குர்ஆன்: 20:57
“அவ்வாறாயின் இதைப் போன்ற சூனியத்தை நாங்களும் உமக்குத் திடனாகச் செய்து காண்பிப்போம்; ஆகவே, நாங்களோஅல்லது நீரோ மாற்றம் செய்ய முடியாதபடி நமக்கும் உமக்குமிடையே ஒரு வார்த்தைப் பாட்டை (எல்லோரும் வந்து காணக்கூடிய) ஒரு சரியான தலத்தில் ஏற்படுத்தும் (என்றான்).
அல்குர்ஆன்: 20:58
மூஸா நபி செய்தது போல மிகப்பெரிய சூனியத்தை செய்ய தான் அவன் சூனிய கூட்டத்தை அழைக்கிறான்
வெரும் போட்டியை செய்ய பீஜே சொல்லும் மேஜிக்கை செய்ய அவன் சூனிய கூட்டத்தை அழைக்கவில்லை
இதனடிப்படையில் ஃபிர்அவ்ன் மிகப்பெரிய சூனிய கூட்டத்தாரை அழைத்து சூனியம் செய்கிறான்
அவர்கள் செய்த சூனியத்தின் தாக்கம் ஒரு கைத்தடியை பாம்பை போல மக்கள் கண்களுக்கு தெரிகிறது
சாதரன கைத்தடியை பாம்பாக நினைக்கும் வகையில்
மன ரீதியான ஒரு பாதிப்பை கண்கள் ஊடாக அங்கே ஏற்ப்படுத்துகிறார்கள்
இங்கே நாம் கவணிக்க வேண்டியது அந்த சூனியக்கார கூட்டம் அவர்கள் கீழே போட்ட கைத்தடியில் சூனியம்செய்யவில்லை
அந்த கைத்தடியை பாம்பாக மக்களுக்கு தெரிய வேண்டும் அதன் அசைவு அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்கைத்தடியை வேறு ஒரு பொருளாக அவர்கள் உணர வேண்டும் என்று மக்களுடைய கண்களுக்கு சூனியம் செய்கிறார்கள்
அந்த சூனியம் அங்கே தாக்கத்தை ஏற்படுத்துகிறது
இதை இவ்வளவு விளக்கமாக நான் சொல்ல காரணம்
முஹம்மத் நபி ﷺ அவர்களுக்கு லபீத என்கிற யூதன் சூனியம் வைக்கிறான்
அந்த சூனியத்தின் தாக்கம் நபி ﷺ அவர்கள் தங்களுட மணைவியரிடம் தாம்பத்தியத்திற்க்கு போகாமல் போனதாகநினைத்துக்கொள்கிறார்கள்
லபீத் செய்த சூனியத்தால் இங்கே அவர்களுக்கு தாக்கம் உண்டாகிறது
அந்த தாக்கத்தை உணர்ந்த நபியவர்கள் அல்லாஹ்விடம் ஷிபா வேண்டி துவா செய்கிறார்கள் தெளிவை வேண்டி துவாசெய்கிறார்கள்
பிறகு அல்லாஹ் அவர்களுக்கு வானவர்கள் மூலம் வஹி அனுப்பி அவர்களுக்கு தெளிவை கொடுக்கிறான்
அவர்கள் முழுவதுமாக குணமடைகிறார்கள்
லபீத் என்கிற சூனியக்காரன் தோற்க்கடிக்கப்படுகிறான்
இந்த சம்பவத்தில் சூனியக்காரன் வெற்றியடையவே இல்லை
ஆனால் பீஜேவும் TNTJவினரும் என்ன சொல்கிறார்கள் என்றால்
சூனியக்காரன் வெற்றிப்பெற்றான் என்று தான் ஹதீஸ் பேசுகிறது குறிப்பிட்ட காலம் தாக்கத்தை ஏற்ப்படுத்தினாலும் அதுவெற்றி தான் என்கிறார்கள்
ஆனால் மூஸா நபி சம்பவத்தில் மட்டும் வெற்றியடைவே இல்லை என்கிறார்கள்
எவ்வளவு பெரிய முறன் என்பதை நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள்
மூஸா நபி சம்பவத்திலும் சூனியக்கார கூட்டம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்
லபீத் செய்த சூனியத்திலும் இங்கே தாக்கம் ஏற்ப்பட்டது
இரண்டு சம்பவத்திலும் அல்லாஹ் வஹியின் ஊடாக சூனியத்தை தோற்க்கடிக்கிறான்
பீஜே மற்றும் TNTJ வினருடைய நிலைபாடு சூனியத்தால் எந்த பாதிப்பும் எந்த தாக்கத்தையும் ஏற்ப்படுத்த முடியாது என்பதுதான் ஆனால் மூஸா நபி சம்பவத்தில் அவர்கள் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறார்கள்
சூனியக்காரன் வெற்றிபெர மாட்டான் என்பது இவர்களுடைய நிலைபாடா அல்லது எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாதுஎன்பது இவர்களுடைய நிலைபாடா..?
எவ்வளவு பெரிய முறன் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்
இறுதியாக
சூனியக்காரன் வெற்றிபெர மாட்டான் என்றால்
அவர்கள் சூனியத்தையே செய்தாலும் அவர்கள் தாக்கத்தையே ஏற்ப்படுத்தினாலும்
அல்லாஹ் அந்த தாக்கத்தை நீக்குவான் சூனியக்காரனை தோற்க்கடிப்பான் என்பது தான் அந்த வசனத்தின் உடையவிளக்கம்
நபியவர்களுக்கு வைத்த சூனியத்தை அல்லாஹ் நீக்கினான் அல்லாஹ் அவர்களை பாதுகாத்தான்
சூனியக்காரன் அங்கே வெற்றியடைய வில்லை
ஒரு நாள் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அல்லது ஒரு நிமிடம் தாக்கத்தை எற்படுத்தினாலும் அது வெற்றி அல்ல என்பதைநாம் புரிந்துக்கொள்ள வேண்டிய விடயம் அல்ல இது சாதரன பாமரனுக்கு விளங்கும் விடயம்
நபியர்களுக்கு சூனியம் வைத்ததாக வரும் ஹதீஸ் 00.00% குர்ஆனுக்கு முறன்பட வில்லை என்பதை
இந்த பதிவின் வாயிலாக நிரூபித்துள்ளேன்
அல்ஹம்துலில்லாஹ்
அடுத்தடுத்து வரக்கூடி பாகங்களில் நாம் பார்க்க இருப்பவை
1.நபிமார்களை பார்த்து மக்கள் ஏன் சூனியக்காரர்கள் என்று சொன்னார்..?
2.பொய் என்கிற அர்த்தத்தில் சூனியம் என்கிற வார்த்தை குர்ஆனில் அல்லாஹ் பயன்படுத்துகிறானா..?
3.சூனியத்தை உன்மை என்று நம்பியவன் சுவர்க்கம் செல்ல மாட்டான் என்று TNTJவினரும் பீஜே தரப்பினரும் ஒரு ஹதீஸைவைக்கிறார்களே அதனுடைய விளக்கம் என்ன..?
4.சூனியக்காரனுக்கு அல்லாஹ்வின் பன்பு இருக்கிறது என்று நாங்கள் சொன்னோமா..?
5.சூனியத்தை எப்படி நம்பிக்கை(ஈமான்) கொள்வது..?
அல்லாஹ் நம் அனைவருக்கும் தெளிவை கொடுக்க போதுமானவன்
-வளரும்
-ஆஷிம் (எ) சித்திக் அகமது
No comments:
Post a Comment