Thursday, 16 February 2023

மைமூனா ரலி திருமணம்

மைமூனா (ரழி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் (இஹ்ராமுடைய / இஹ்ராம் அல்லாத) நிலையில் திருமணம் செய்தார்கள்.

என முரண்பட்டு வரும் ஹதீஸ்களை அணுகும் முறை…


* இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொல்கிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரழி) அவர்களை இஹ்ராமுடைய நிலையிலேயே திருமாணம் செய்து கொண்டார்கள்” (முஸ்லிம்: 1410)

* மைமூனா (ரழி) அவர்களை தொட்டும் யஸீத் பின் அஸம் (ரழி) அவர்கள் சொல்கிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் என்னை இஹ்ராம் அல்லாத முறையிலேயே திருமனம் செய்து கொண்டார்கள்” (முஸ்லிம்: 1411)

* அபூ ராபி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரழி) அவர்களை ஹலாலான நிலையிலேயே திருமனம் செய்து கொண்டார்கள், அவர்களிருவருக்கும் நானே தூது சொல்பவனாக இருந்தேன்”. (அஹ்மத்: 26656).


மைமூனா (ரழி) அவர்கள் திருமனம் செய்யப்பட்டது இஹ்ராமுடைய நிலையிலா அல்லது ஹலாலான (இஹ்ராம் அல்லாத) நிலையிலா? என்ற கேள்வி வருவதற்கு மிக முக்கிய காரணம் இது குறித்து வரும் ஹதீஸ்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கருத்துகளை தருவதேயாகும்.


இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: “மைமூனா (ரழி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அல்லாத நிலையில் திருமானம் செய்தார்கள் என்பதையே மக்களில் அதிகமானவர்களின் புரிதலாகும்” (மஜ்மூஉல் பதாவா: 73/18).


இதுவே ஸஹாபாக்கள் மற்றும் உலமாக்களிடம் எற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும், எனவேதான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் ஹதீஸ் குறித்து சொல்லும் போது “இஹ்ராமுடைய நிலையில்” என்ற வாசகம் அவர்களிடம் ஏற்பாட்ட தவறாகும்” என்று சுட்டிக்காட்டுகின்றனர்.


இது குறித்து இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கிறார்கள்:

“மைமூனா (ரழி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமுடைய நிலையில் திருமனம் முடித்ததாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொல்வதற்கு மாற்றமாக அபூ ராபி (ரழி) அவர்கள்: “(இஹ்ராம் அல்லாத) ஹலாலான நிலையிலேயே திருமனம் முடித்தார்கள், நானே அவர்கள் இருவருக்கும் இடையில் தூது கொண்டு செல்பவனாகவும் இருந்தேன்” என்று குறிப்பிடுகிறார்கள்.

இவ்விரு செய்திகளில் அபூ ராபி (ரழி) அவர்களுடைய அறிவிப்பே மிகச்சரியானது என்பதை பின்வரும் காரணங்களைக் கொண்டு உருதி செய்யலாம்:

1- அந்த திருமன நிகழ்வின் போது அபூ ராபி (ரழி) அவர்கள் பருவ வயதை அடைந்தவராகவும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பருவ வயதை அடையாதவராகவும் இருந்தனர். எனவே அபூ ராபி (ரழி) அவர்கள் ஹதீஸ்களை நன்கு நினைவில் வைத்துக் கொள்பவராக இருப்பார்.

2- அபூ ராபி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் மைமூனா (ரழி) அவர்களுக்கும் மத்தியில் தூதுவராக இருந்து அவர்களிருவருக்கும் செய்திகளை பாரிமாரக் கூடியவராக இருந்திருக்கிறார், எனவே இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களை விட குறித்த விடயத்தை நன்கு அறிந்தவராகவும், இந் நிகழ்வை நேரில் பார்த்தவராகவும் இருக்கிறார்.

3- இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குறித்த சம்பவத்தின் போது சிறுவராக இருந்தது மட்டுமல்லாது அப்போது உம்ரா கெய்பவராகவும் இருக்கவில்லை, எனவே செய்தியை வேறொருவர் முலமே கேட்டிருக்கிறார்கள்.

4- நபி (ஸல்) அவர்கள் மக்கா வந்ததும் தவாப் செய்து, தொங்கோட்டம் ஒடி, தலையை மழித்து இஹ்ராமை கழைந்து விட்டார்கள். எனவே! தவாபின் போதோ அல்லது அதற்கு முன்னரோ பின்னரோ திருமனம் செய்து கொள்ளவில்லை என்பது இஹ்ராம் கழைந்த பின்னரே திருமனம் செய்துள்ளார்கள் என்ற அபூ ராபி (ரழி) அவர்களின் செய்தியை உருதி செய்கிறது.

5- ஸஹாபாக்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மீது குற்றம் பிடித்தது போல அபூ ராபி (ரழி) அவர்களை குற்றம் பிடிக்கவில்லை.

6- இஹ்ராமின் போது திருமனம் முடிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்ற செய்தியை அபூ ராபி (ரழி) அவர்களின் செய்தி உருதி செய்வதாக உள்ளது.


(ஆனாலும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் செய்தி அதற்கு முரன்படுகிறது) எனவே இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் செய்தி ஒன்றில் மாற்றப்பட்டதாக, அல்லது நபி (ஸல்) அவர்களுக்கு தனித்துவமான சட்டமாக இருக்க வேண்டும், இவை இரண்டிற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடத்தில் தவறு உள்ளது என்பது தெளிவாகிறது.

 

7- மைமூனா (ரிழி) அவர்களின் சகோதரியின் மகன் யசீத் பின் அல் அஸம் அவர்கள் “நபி (ஸல்) அவர்கள் (இஹ்ராம் கழைந்த) ஹலாலான நிலையில் மைமூனா (ரழி) அவர்களை திருமனம் செய்தார்கள் என்பதை சாட்சிப்படுத்துகிறார்” என்பதை முஸ்லிம் இமாம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். என்று இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் தனது நூல் (ஸாதுல் மஆத்: 5/112-124). ல் குறிப்பிடுகிறார்கள்.


இமாம் இப்னுல் குதாமா (ரஹ்) அவர்கள் மேற்குறித்த விடயம் குறித்து குறிப்படும் போது: “மைமூனா (ரழி) அவர்களே தன்னுடைய நிலைமை குறித்து நன்கு அறிந்தவர்கள், மற்றும் அபூ ராபி (ரழி) அவர்கள் இந்த சம்பவத்தோடு தொடர்புபட்டவர்கள், குறித்த விடயத்தில் இருவருக்கும் மத்தியில் தூதுவராகவும் இருந்திருக்கிறார்.

எனவே இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பெரியவரா இருந்திருந்தாலும் மேற்படி காரணங்களுக்காக அபூ ராபி (ரழி) அவர்களுடைய செய்தியை முற்படுத்த வேண்டும் என்பது நிதர்சனமாகும். 

மாறாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சிறியவர் என்பது மட்டுமல்லாது அந்த நிகழ்வை நேரில் காணாதவர் உண்மையை சரியாக புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ள சிறு வயதுடையராக இருக்கிறார்கள், இந்த காரணங்களே அவரிடத்தில் தவறு உள்ளது என்பதை புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது.

அதையும் தாண்டி (இப்னு அப்பாஸ் அவர்களின் ஹதீஸையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்றால் “இஹ்ராமுடைய நிலமையில்” எனும் வாசகத்திற்கு (ஷஹ்ருல் ஹராம், பலதுல் ஹராம்) கண்ணியமிக்க மாதத்தில் அல்லது கண்ணியமிக்க ஊரில் இருந்த நிலையில்) என்ற அர்த்தம் கொடுத்தே ஏற்றுக் கொள்ள முடியும். என்று இமாம் இப்னுல் குதாமா அவர்கள் தனது (முக்னி: 3/318) ஏனும் கிதாபில் குறிப்பிடுகிறார்கள்.


சுருக்கம்: நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரழி) அவர்களை (இஹ்ராம் அல்லாத) ஹலாலான நிலையிலேயே திருமனம் செய்தார்கள் இது குறித்து வரும் செய்திகளே மிகச்சரியானது, இதற்கு மாற்றமான கருத்தில் வரும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுடைய செய்தி ஸஹீஹானதாக இருந்தாலும் அதில் இடம் பெறும் - இஹ்ராமுடைய நிலையில் - என்ற வாசகம் அவர்களிடம் ஏற்பட்ட தவறான புரிதலால் அல்லது தவறாக சொல்லப்பட்டுள்ளது. என்பதே முடிவாகும்.


-அல்லாஹ்வே மிக அறிந்தவன்-

-موقع الإسلام سؤال وجواب : رقم الفتوى: 159220

No comments:

Post a Comment