சூனியம் பகுதி 1
சூனியத்திற்க்கு அல்லாஹ் நாடினால் தாக்கம் உண்டு
என்று சொல்பவர்கள் கொடுக்கும் ஆதாரம்
சூரா அல்பகரா உடைய 102 வது வசனம் தான்
فَيَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا يُفَرِّقُوْنَ بِهٖ بَيْنَ الْمَرْءِ وَ زَوْجِهٖ
"அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்"
சூனியத்தின் மூலம் கணவன் மணைவியை பிரிக்க முடியும் அல்லாஹ் நாடினாலே தவிர என்ற நம்பிக்கையில்இருப்பவர்களுடைய முதல் ஆதாரமாக அல்பகரா 102 வது வசனம் இருக்கிறது
அந்த வசனத்தின் அடிப்படையில் ஹாரூத் மாரூத்திடம் சூனியத்தின் மூலம் கணவன் மணைவி பிரிவு வகையான சூனியத்தைகற்றுக்கொண்டார்கள்
கணவன் மணைவி பிரிவை தவிர்த்து
கை கால் முடக்குவது தொடர்பாக குர்ஆனிலோ ஹதீஸிலோ சொல்லப்படவில்லை ஆகையால் கை கால் முடக்க முடியுமாஎன்று கை கால் முடக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டவனிடம் கேட்பது தான் நியாயம்
எ(ங்களை)ன்னை பொருத்தவரை குர்ஆனில் கணவன் மணைவி பிரிவு தொடர்பாக மட்டும் சொல்லப்பட்டுள்ளது
ஹதீஸிலும் கணவன் மணைவி தொடர்பாக தான் சொல்லப்பட்டுள்ளது இதை தவிர்த்து இதர செயல்கள் எதுவும் எங்களுக்குசொல்லப்படாத காரணத்தால் அது எங்களுக்கு தேவையில்லாத ஒன்று
அடுத்ததாக பிஜே & TNTJ வினர் 2.102 வசனத்திற்க்கும் கொடுக்கும் விளக்கம்
ஹாரூத் மாரூத் என்கிற ஷைத்தான்களிடமிருந்து அந்த மக்கள் சூனியத்தைக் கற்றுக்கொள்ளவில்லை மாறாக கோல் சொல்லிபொய் சொல்லி புறம் பேசி இப்படி நாவினால் செய்ய கூடிய செயலை வைத்து கணவனுக்கும் மணைவிக்கும் இடையில்பிரிவினையை உண்டாக்கும் ஒரு செயலை தான் கற்றுக்கொண்டார்களே தவிர சூனியத்தை அல்ல என்பது அவர்களுடையவிளக்கம்
என்னுடைய விளக்கம் மற்றும் எதிர்வாதம்
அந்த மக்களுடைய நோக்கம் சூனியத்தை கற்றுக்கொள்வது தான்
சூனியத்தை கற்றுக்கொள்வதற்க்காக தான் ஹாரூத் மாரூத்திடம் போனார்கள்
சூனியத்தை கற்க்க சென்ற மக்கள் சூனியத்தை கற்றுக்கொள்ளாமல்
பொய் சொல்லக்கூடிய பன்பு அல்லாஹ் இயற்க்கையாக மனிதனுக்கு கொடுத்த ஒன்று
கோல் சொல்வது என்பது அல்லாஹ் மனிதனுக்கு இயற்க்கையாக கொடுத்த பன்பு
சூனியத்தை கற்றுக்கொள்ள சென்ற மக்கள் சூனியத்தை கற்றுக்கொள்ளாமல் ஏற்கனகே தன்னிடம் இருக்கும் பொய் சொல்லகூடிய கோல் சொல்ல கூடிய பன்பை கற்றுக்கொண்டார்கள் என்று சொல்வது அடி முட்டாள் தனமான வாதமாகும்
பொய் சொல்வதில் இருந்து தான் கோல் சொல்லுதலும் பிறக்கும்
பொய்யின் அடுத்தகட்டம் தான் கோல்
மனிதன் குழந்தையில் இருந்தே பொய் சொல்லக்கூடிய பன்போடு தான் வழருகிறான்
இன்றைக்கும் நாம் பொய் சொல்லி சில விடயத்தை செய்கிறோம் பிரத்யேகமாக கணவன் மணைவியை பிரிக்க வேண்டும்என்று பொய் பேச யாரும் படித்து விட்டோ ஒருவரிடம் சென்று எப்படி பொய் சொல்லுவது என்றோ கற்றுக்கொண்டு வருவதுகிடையாது
உதாரணமாக ஒருவன் மொபைல் ரிப்பேரிங் கற்றுக்கொள்ள செல்கிறான்
அந்த இடத்தில் அவனுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது இதை கற்றால் நீ மொபைலை வீனாக்கி விடுவாய் என்று
எச்சரிக்காமல் கற்றுக்கொடுக்கப்படவில்லை இருந்தும் எதன் மூலம் மொபைலுடைய Back Panel மற்றும் பேட்டரி கலட்டிமாட்ட முடியுமோ அதை கற்றுக்கொண்டான்
இப்படி சொன்னா எவனாவது நம்புவானா..?
அவனுடைய நோக்கம் மொபைல் ரிப்பேரிங் கற்றுக்கொள்வது மட்டும் தான் பேட்டரி கலட்டி மாட்டுவது என்பது பாமரனுக்குகூட தெரியும்
ஏற்கனவே தெரிந்த ஒன்றை காசை தண்ட செலவு செய்து நஷ்ட்டமடைந்து கற்றுக்கொள்வானா..?
நிச்சயம் மாட்டான்
அவன் கற்றுக்கொண்டால் அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கற்றுக்கொள்ள வேண்டும் இல்லையேல் திரும்பசென்றுவிட வேண்டும்
அந்த அடிப்படையில் ஹாரூத் மாரூத்திடம் சென்ற மக்களுடைய நோக்கம் சூனியத்தை கற்றுக்கொள்வது மட்டும் தான்அவர்கள் திரும்ப செல்லவில்லை இருந்து கற்றுக்கொள்கிறார்கள்
அவர்களுக்கு எச்சரிக்கை விட படுகிறது இதை கற்று நீ காஃபிர் ஆகிடாதேனு
அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அவர்கள் கணவன் மணைவிக்கும் இடையில் பிரிவினையை உண்டாக்கும்சூனியத்தை கற்றுக்கொண்டார்கள்
சூனியத்தை கற்றுக்கொள்ளாமல் சாதரன விடயத்தை கற்றார்கள் என்கிற கருத்து அடுத்து வரக்கூடிய வசனங்களுக்குமுறனாகவே அமைகிறது
நீ காஃபிராகி விடுவாய் என்ற எச்சரிக்கையின் வாயிலாக அவர்கள் சூனியத்தை கற்றுக்கொள்ளவில்லை என்பது தான் TNTJ &PJ வினருடைய வாதம் ஆனால் அல்லாஹ் என்ன சொல்கிறான் என்பதை பாருங்கள்
وَلَوْ اَنَّهُمْ اٰمَنُوْا وَاتَّقَوْا لَمَثُوْبَةٌ مِّنْ عِنْدِ اللّٰهِ خَيْرٌ ؕ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ
அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலி மிகவும்மேலானதாக இருக்கும்; இதனை அவர்கள் அறிய வேண்டாமா?
அல்குர்ஆன்: 2:103
அவர்கள் காஃபிராகி விட்டார்கள் மீண்டும் அல்லாஹ் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்கிறான்
அவர்கள் சூனியத்தை கற்று காஃபிராகி விட்டார்கள் என்று அல்லாஹ் தெளிவாக சொல்கிறான் ஆனால்
அல்லாஹ்வின் மீதே இட்டுக்கட்டி உள்ளார் நம்ம அண்ணன் பீஜே அவர்கள் சூனியத்தை கற்றுக்கொள்ள வில்லை என்று
இந்த அடிப்படையில் சூனியத்திற்க்கு அல்லாஹ்வின் நாட்டம் உள்ளது அவர்கள் சூனியத்தை தான் கற்றுக்கொண்டார்கள்
அவர்கள் கற்றுக்கொண்டாலும்
இல்லாஹ் பிஹ்தினில்லாஹ்
اِلَّا بِاِذْنِ اللّٰهِؕ
அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் அவர்களால் எந்த தீங்கும் செய்ய இயலாது
1.கணவன் மணைவியை பிரிப்பது சூனியமா..?
2.சூனியக்காரன் எப்பது வந்தாலும் வெற்றியடை மாட்டான் என்கிற வசனத்தின் அர்த்தம் என்ன..?
3.நபிமார்கள் பார்த்து சூனியக்காரர்கள் என்று மக்கள் ஏன் சொன்னார்கள்
4.மூஸா நபி அவர்களுக்கும் சூனியக்கார்ர்களுக்கும் நடந்த சம்பவத்தில் சூனியம் செய்தார்கள் கண்கட்டி வித்தைசெய்தார்களா..?
5.முஹம்மது நபி ﷺ அவர்களுக்கு சூனியம் செய்து லபீத் பின் அஹஸம் வெற்றி பெற்றானா..?
6.முஹம்மது நபி ﷺ அவர்களுக்கு(நவுதுபில்லாஹ்) பைத்தியம் என்று ஹதீஸில் வருகிறதா..?
இன் ஷா அல்லாஹ் அடுத்தடுத்த பகுதியில் பார்க்கலாம்...!
வளரூம்
-ஆஷிம் (எ) சித்திக் அகமது
உங்களை வாதத்தின் படி ஜோசியம் மற்றும் சகுனம் எல்லாம் உண்மைதானே?
ReplyDeleteஉங்கள் வாதத்தின் அடிப்படையில் ஜோதிடம், சகுனம் உண்மைதானே ??
ஏனென்றால் நீங்கள் உங்கள் கட்டுரையின் முதல் பகுதியில் சூனியமென்று ஒன்று இருந்ததால் தானே மக்கள் கற்றுக்கொண்டார்கள் என்று சொன்னீர்கள்.
அதேபோன்று மக்கலிள் சிலர் ஜோதிடம் கற்றுக்கொள்கிறார்கள் , பால்கிதாப் பார்க்கிறார்கள், அதை உண்மை என்றும் நம்புகிறார்கள் உங்கள் வாத திறமையின் படி பார்த்தால் ஜோதிடம் உண்மை, நீங்கள் அதை மறைமுகமாக ஏற்றுக்கொளகிறீர்கள். அப்படித்தானே ?